தமிழ்நாடு

காவிரி நீர் விவகாரம் : “உச்ச நீதிமன்றத்தின் கெடு நாளையோடு முடிகிறது..” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி !

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்த ஆரம்பித்தால் நீதிமன்றத்திற்கு என்று உள்ள தனி அதிகாரம் என்ன ஆகும்? என அமைச்சர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

காவிரி நீர் விவகாரம் : “உச்ச நீதிமன்றத்தின் கெடு நாளையோடு முடிகிறது..” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்த ஆரம்பித்தால் உச்ச நீதிமன்றத்திற்கு என்று உள்ள தனி அதிகாரம் என்ன ஆகும் ? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

காவிரி நீர் விவகாரம் : “உச்ச நீதிமன்றத்தின் கெடு நாளையோடு முடிகிறது..” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி !

இதுகுறித்து பேசிய அவர், "கர்நாடகாவில் பந்த் செய்வது பற்றி நான் ஒன்னும் சொல்லவில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன், உச்ச நீதிமன்ற தீர்ப்பைதான் கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் லெஜிஸ்லேச்சர், எக்சிக்யூடிவ், ஜூடிசரி என மூன்று பிரிவுகளை சொல்கிறார்கள். இந்த மூன்றில் நீதி மன்றம் என்ன சொல்கிறதோ அதை தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்த ஆரம்பித்தால் உச்ச நீதிமன்றத்திற்கு என்று உள்ள தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும். தங்கள் கருத்துக்கு வீதியில் எதிர்ப்பு வருகிறது. அதை எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும் என்பதை உச்ச நீதி மன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.

காவிரி நீர் விவகாரம் : “உச்ச நீதிமன்றத்தின் கெடு நாளையோடு முடிகிறது..” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி !

உச்ச நீதிமன்றத்தின் படி தமிழ்நாட்டிற்கு 13/9/2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நாளையோடு 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் நமக்கு தரப்படுகிற தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் 2000, 3000 கன அடிகள் வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7000 கன அடி வந்து கொண்டிருக்கிறது. காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி இன்னும் 11000 கன அடி தண்ணீர் நமக்கு வர வேண்டியுள்ளது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

banner

Related Stories

Related Stories