தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன ? அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன ? - நிபுணர்கள் சொல்லும் தகவல் !

டெங்கு பாதிப்பை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவும், மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன ? அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன ? - நிபுணர்கள் சொல்லும் தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் இருப்போருக்கு எலிசா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் வந்த எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

டெங்கு அறிகுறிகள் என்ன ?

  • கடுமையான தலைவலி,

  • தாங்கமுடியாத காய்ச்சல்,

  • உடலில் திடீரென ஏற்படும் சிவப்புப் புள்ளிகள்,

  • உதடு, நாக்கு மற்றும் வாய் உலர்ந்து போதல்,

  • இதயத் துடிப்பு வழக்கத்தை விட அதிகரித்தல்,

  • தொடர்ந்து ஏற்படும் வயிற்றுவலி,உடல்வலி,உடல்சோர்வு,

  • தொடர்ச்சியான வாந்தி, மூட்டுவலி.

போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

அதே போல டெங்கு பாதிப்பை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவும், மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன ? அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன ? - நிபுணர்கள் சொல்லும் தகவல் !

டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் முறை :

  • டெங்கு காய்ச்சலை பரவும் 'ஏடிஸ்' வகை கொசு நல்ல தண்ணீரிலே உற்பத்தி ஆவதால் வீடுகள் மற்றும் வீட்டின் அருகிலுள்ள நல்ல நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் .

  • தண்ணீர் தேங்கும் இடங்களான காலி பாட்டில்கள்,தேங்காய் சிரட்டைகளை அப்புறப்படுத்தி அதில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

  • கொசுக்கள் அடையாத வகையில் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் டெங்கு காய்ச்சலை விரட்டலாம்.

banner

Related Stories

Related Stories