தமிழ்நாடு

“இந்தியாவில் பட்டம் பெற்ற பெண்கள் 26% பேர்.. தமிழ்நாட்டில் மட்டும் 22% பேர்” : சபாநாயகர் அப்பாவு பதிலடி!

“இதுபோல் ஆண் பெண் என இருபாலரும் இந்தியாவில் பட்டம் பெற்றவர்கள் 34 % பேர். ஆனால் தமிழ்நாட்டில் 51% பேர் பட்டம் பெற்றுள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் பட்டம் பெற்ற பெண்கள் 26% பேர்.. தமிழ்நாட்டில் மட்டும் 22% பேர்” : சபாநாயகர் அப்பாவு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடியில் செயலப்பட்டு வரும் பழமையான புனித அன்னாள் செவிலியர் பயிற்சி கல்லூரியில் 2022_2023 கல்வியாண்டில் பயின்று முடித்த மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 75 மாணவிகளுக்கு செவிலியர் பயிற்சி முடித்ததற்கான பட்டங்களை வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ”அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நிலையை கொண்டு வந்தது. கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் இதைத் தொடர்ந்து அனைவரும் சமமாக கல்வி கற்க வேண்டும் எனது தந்தை பெரியாரின் போராட்டத்தின் விளைவாக பெண்களும் கல்வி கேட்கக் கூடிய நிலை உருவானது

இதுபோல் தொடர்ந்து பெண்களும் கல்வி கற்க வேண்டும் என தந்தை பெரியார், காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடி வருகின்றனர். இந்த திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தை தலைநிமிர செய்துள்ளது. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

அப்பாவு
அப்பாவு

இந்தியாவில் பட்டம் பெற்ற பெண்கள் 26 சதவீதம் பேர். ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் 22 சதவீதம் பேர் படித்து பட்டம் பெற்றுள்ளனர். மேலும் இதுபோல், ஆண் பெண் இருபாலரும் இந்தியாவில் பட்டம் பெற்றவர்கள் 34 சதவீதம் பேர். ஆனால் தமிழ்நாட்டில் 51 சதவீதம் பேர் பட்டம் பெற்றுள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் முத்தமிழறிஞர் ஆட்சி காலத்தில் முதல் முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார்.

தற்போது தான் உத்தர பிரதேசத்தில் இலவச மின்சாரம் தருவோம் என தெரிவிக்கிறார்கள். இப்படி எண்ணற்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக தீட்டி செயல்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்” என தெரிவித்தார் .

banner

Related Stories

Related Stories