தமிழ்நாடு

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. கொசு விரட்டியால் நள்ளிரவில் சோகம் !

சென்னையில் கொசு விரட்டும் மிஷின் எரிந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. கொசு விரட்டியால் நள்ளிரவில் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னையை அடுத்துள்ள மணலி எம் எம் டி ஏ இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் உடையார். zomato ஊழியரான இவருக்கு திருமணமாகி மனைவி செல்வி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது உடையாருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது மனைவி அவரை மருத்துவமனையில் இருந்து கவனித்து வந்துள்ளார். இதனால் 3 பிள்ளைகள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். எனவே அவர்களை கவனித்துக் கொள்வற்காக செல்வியின் தாயார் சந்தான லட்சுமி ஊரிலிருந்து வந்துள்ளார்.

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. கொசு விரட்டியால் நள்ளிரவில் சோகம் !

இந்த சூழலில் நேற்று இரவு வழக்கமாக குழந்தைகள் உட்பட அனைவரும் தூங்க சென்றுள்ளனர். அப்போது வீட்டில் கொசு தொல்லை காரணமாக மூதாட்டி சந்தான லட்சுமி, கொசு விரட்டும் லிக்விட் மிஷினை பயன்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் அந்த மிஷின் சூடாகி உருகியதில் அருகில் இருந்த அட்டைபெட்டி மீது விழுந்ததில் தீப்பிடித்து புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவர்களது வீட்டில் இருந்து அதிகளவு புகை வெளியே வந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்க்த்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்த்து வந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. கொசு விரட்டியால் நள்ளிரவில் சோகம் !

அப்போது வீட்டில் இருந்த பாட்டி உட்பட பிரிய தரிதா, சங்கீதா, பவித்ரா ஆகிய மூன்று பிள்ளைகளும் உயிரிழந்து கிடந்தனர். பின்னர் அவர்கள் அனைவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர். டவர் Fan-ல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் உடற்கூறாய்வு முடிவுக்கு பிறகே அவர்கள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலிசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் கொசு விரட்டும் மிஷின் எரிந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

banner

Related Stories

Related Stories