தமிழ்நாடு

“பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கம் எழுப்பிய சோபியா மீதான FIR ரத்து” : மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு !

“பாசிச பாஜக ஆட்சி ஒழிக” கோஷம் எழுப்பிய இளம் பெண் சோபியா மீதான எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை 5 ஆண்டுகளுக்கு பிறகு ரத்து செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

“பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கம் எழுப்பிய சோபியா மீதான FIR ரத்து” : மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா என்பவர் கடந்த 2018 ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனின் சென்னை தூத்துக்குடி விமான பயணத்தின் போது பாஜக கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அப்போது பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதைத்தொடர்ந்து சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பின்னர் இதுதொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சோபியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதீய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுவை, தெலுங்கானாவின் கவர்னருமான தமிழிசையும் பயணம் செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும் போது ஒன்றிய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன்.

“பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கம் எழுப்பிய சோபியா மீதான FIR ரத்து” : மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு !

இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் போலிஸார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணை செய்து நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது ஆளுநராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு மனுதாரராக உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் இந்த வழக்கில் தூத்துக்குடி போலிஸார் சென்னை சிட்டி போலிஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.

இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலிஸார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி தனபால் நீதிபதி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

banner

Related Stories

Related Stories