மத்திய பிரதேச மாநிலம் நரிசிங்பூர் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் நடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல் துறை உதவி ஆய்வாளர் அனில் அஜ்மேரியா, சஞ்சய் சூர்யவன்ஷி, நீரஜ் டெஹரியா ஆகிய மூன்று போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது போதைப் பொருள் கடத்தல் காரரான சோனு கஹரின் வீட்டில் போலிஸார் சோதனை செய்தபோது 20 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்தனர்.
அப்போது மகனைக் கைது செய்யாததற்கு போலிஸாரிடம் அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் போலிஸார் அவரை இழுத்துச் சென்று காரில் ஏற்றினர்.
இதையடுத்து அந்த பெண் போலிஸாரின் வாகனத்திற்கு முன்பு நின்றுள்ளார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே போலிஸார் அவரை அங்கிருந்து நகரும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் அப்படியே இருந்துள்ளார்.
இதனால் போலிஸார் காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். இதில் காரின் பானெட்டி தொங்கியபடி சில தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய மூன்று போலிஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.