தமிழ்நாடு

மணிப்பூர் வன்முறையில் தப்பித்து சென்னை வந்த குடும்பம்.. அரசு எடுத்த துரித நடவடிக்கை!

மணிப்பூர் வன்முறையில் இருந்து தப்பித்து சென்னை வந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்குத் தமிழ்நாடு அரசு உதவி செய்துள்ளது.

மணிப்பூர் வன்முறையில் தப்பித்து சென்னை வந்த குடும்பம்..  அரசு எடுத்த துரித நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 90 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் வன்முறை காரணமாக அம்மாநில மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு அண்டை மாநிலங்களுக்குத் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்தவர் தேங்தாங்ஜு என்பவர் தனது குடும்பத்தார் 8 பேருடன் சென்னைக்குத் தப்பித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த இவர்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் இரண்டு நாட்கள் ரயில் நிலையத்திலேயே தங்கி இருந்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறையில் தப்பித்து சென்னை வந்த குடும்பம்..  அரசு எடுத்த துரித நடவடிக்கை!

பின்னர் ஜூலை 19ம் தேதி செங்குன்றத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் அலுவல் வேலை காரணமாக ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது இவர்கள் அழுது கொண்டிரு இருந்தை பார்த்து விசாரணை நடத்தியுள்ளார். இதில் இவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

பிறகு அவர்கள் அனைவரையும் மூர்த்தி செங்குன்றத்தில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு உடை கொடுத்துள்ளார். இதையடுத்து ரூ. 3ஆயிரத்தில் வாடகைக்கு வீடு ஒன்றும் பார்த்துக் கொடுத்துள்ளார்.

பின்னர் இவர்களை நேற்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து முதலமைச்சரின் தனி பிரிவில் கோரிக்கை மனு கொடுக்கவைத்துள்ளார். இந்த மனுவைப் பார்த்த அதிகாரிகள் உடனே சென்னை மாவட்ட ஆட்சியர் அருணாவுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறையில் தப்பித்து சென்னை வந்த குடும்பம்..  அரசு எடுத்த துரித நடவடிக்கை!

உடனே இவர்களை அலுவலகத்திற்கு வந்து பார்க்கும் படி கூறியுள்ளார். பின்னர் மூர்த்தி அவர்களைச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஆட்சியர் அருணா மணிப்பூரிலிருந்து வந்த குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேங்தாங்ஜு குடும்பத்தினரின் கல்வித் தகுதி விவரங்களைச் சேகரித்து தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர். மேலும், செங்குன்றம் பகுதி வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இவர்கள் தங்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தங்கள் வாழ்வாதாரத்துக்கும் உதவிய சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளுக்கு தேங்தாங்ஜு குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories