தமிழ்நாடு

பிளாஸ்டிக் இல்லாத தமிழகமே தமிழ்நாடு அரசின் நோக்கம் -அமைச்சர் மெய்யநாதன் பேட்டி!

தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பசுமை பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்!

பிளாஸ்டிக் இல்லாத தமிழகமே தமிழ்நாடு அரசின் நோக்கம் -அமைச்சர் மெய்யநாதன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பசுமை பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த ஆண்டு இத்திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அத்திடத்திற்கான சான்றிதழை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,

பிளாஸ்டிக்கு எதிரான ஒரு போரை மேற்கொள்ளும் வகையில் டைனோஸ் பிளாஸ்டிக் என்ற அமைப்போடு சேர்ந்து தமிழக மக்களிடையே பிளாஸ்டிக் க்கு எதிரான ஒரு மனநிலை உண்டாக்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மேலும் அர்பன் கூலிங் ப்ரோக்ராம் என்ற செயல்பாடு ஒப்பந்தமும் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை மூலமாக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் இருந்து 25 அரசு பள்ளிகளுக்கு பசுமை பள்ளியாக மற்ற ஒரு பள்ளிக்கு 20 லட்ச ரூபாய் விகிதம் 5 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் இல்லாத தமிழகமே தமிழ்நாடு அரசின் நோக்கம் -அமைச்சர் மெய்யநாதன் பேட்டி!

இந்த பசுமை பள்ளி திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் சூரியத்து தகடுகள் மூலம் மின் சக்தி முற்றிலுமாக உபயோகப்படுத்துவது பள்ளி வளாகங்களில் மரம் நடுவது மேலும் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் மூலிகைகள் விவசாயம் செய்வது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும்

கிராமப்புற பள்ளிகள் மட்டுமின்றி நகர்ப்புற பள்ளிகளிலும் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது ஓரிரு மாதத்தில் மேலும் 50 பள்ளிகள் நினைக்க உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் களை குறைத்து மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிப்பது மேலும் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே பிளாஸ்டிக் உபயோகங்களை குறைக்கும் மனநிலையை உண்டாக்கும் நோக்கில் மற்றும் மரங்கள் நடுவது சூரிய சக்தியை பயன்படுத்துவது போன்ற ஆலோசனைகள் இந்த நிகழ்ச்சியில் வாயிலாக வழங்கப்பட்டது" எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories