தமிழ்நாடு

6 தளம் ரூ.120 கோடி.. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: 5 முக்கிய அம்சம்

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

6 தளம் ரூ.120 கோடி.. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: 5 முக்கிய அம்சம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை - புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்நூலகம். 2,13,338 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்க சுமார் ரூ.10 கோடி, தொழில்நுட்ப உபகரணங்களுக்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, ஏற்கெனவே அரசாணை பிறபித்து, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

6 தளம் ரூ.120 கோடி.. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: 5 முக்கிய அம்சம்

கட்டிட தளங்கள் விவரம்:

6 தளங்களை கொண்டுள்ள இந்நூலகத்தின் அடித்தளத்தில் (19314 சதுரடி ) வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைக்கிறது. தரைத் தள பகுதியில் (32656) கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுபாட்டு அறை, தபால் பிரிவுகள் அமைகின்றன.

முதல் தளம்: கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது

2-வது தளம் : தமிழ் நூல்கள்பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.

6 தளம் ரூ.120 கோடி.. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: 5 முக்கிய அம்சம்

3-வது தளம் : ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன

4-வது தளம்: சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு இடம் பெற்றுள்ளது.

5-வது தளம் : அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

6-வது தளம் : ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு , நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகள் அமைந்துள்ளன.

banner

Related Stories

Related Stories