தமிழ்நாடு

குவைத் டு சென்னை.. நடுவானில் சிகரெட் புகைத்த பயணி.. இறுதியில் காத்திருந்த சோகம்.. நடந்தது என்ன ?

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகைபிடித்த பயணியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குவைத் டு சென்னை.. நடுவானில் சிகரெட் புகைத்த பயணி..   இறுதியில் காத்திருந்த சோகம்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், சென்னைக்கு 184 பயணிகளோடு நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது. விமானம் சுமார் 38,000 அடி உயரத்தில், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த, மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முகமத் சதாம் (32) என்ற பயணி, தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் சிகரெட் லைட்டரை எடுத்து, சிகரெட் பற்ற வைத்து புகைக்க தொடங்கினார்.

இதை அடுத்து சக பயணிகள், அவர் புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பயணி முகமத் சதாம், சக பயணிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். இதை அடுத்து, பயணிகள், விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். உடனே விமான பணிப்பெண்கள், அந்த பயணியிடம், விமானத்திற்குள் புகை பிடிக்கக் கூடாது. சக பயணிகளின் பாதுகாப்பு, விமானத்தின் பாதுகாப்பு, எங்களுக்கு முக்கியம் என்று கண்டித்தனர். ஆனால் அந்த பயணி, விமான பணிப்பெண்கள் கண்டிப்பை அலட்சியப்படுத்திவிட்டு,தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டு இருந்தார்.

குவைத் டு சென்னை.. நடுவானில் சிகரெட் புகைத்த பயணி..   இறுதியில் காத்திருந்த சோகம்.. நடந்தது என்ன ?

இதை அடுத்து விமான பணிப்பெண்கள், தலைமை விமானியிடம் புகார் செய்தனர். உடனே தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். நடு வானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில், பயணி ஒருவர் புகை பிடித்து ரகளை செய்கிறார். எனவே பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.இதை அடுத்து விமானம் நேற்று இரவு 8:30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, புகைப்பிடித்து ரகளை செய்த, மகாராஷ்டிரா மாநில பயணி முகமது சதாமை பிடித்து விசாரித்தனர். அப்போதும் அந்தப் பயணி, விமானத்திற்குள் புகை பிடிப்பது எனது விருப்பம். அதைக் கேட்க நீங்கள் யார்? என்று கூறியநிலையில், அவரை அழைத்து சென்று சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

அதோடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகள், பயணி முகமது சதாம் மீது, முறைப்படி போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து போலீசார் பயணி முகமது சதாம் மீது, விமான பாதுகாப்பு சட்டம், பாதுகாக்கப்பட்ட இடத்தில் தடையை மீறி புகைப்பிடித்தல், விமானத்திற்கும், சக பயணிகளுக்கும் ஆபத்தை விளைவித்தல் உட்பட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பயணி முகமத் சதாமை கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

banner

Related Stories

Related Stories