தமிழ்நாடு

”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை கிடையாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எம்.கே.தி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 11 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " அரசின் சார்பாக ரூ.5 லட்சம் மாணவர்களுக்கு 234 கோடி செலவில் வருடம் தோறும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது.

மாணவர்கள் இதை இலவசமாக பார்க்காமல், கல்விக்கான உரிமையாக பார்க்க வேண்டும். மாணவர்களிடமிருந்து பறிக்க முடியாத ஒரே சொத்து கல்வி தான். அரசு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாணவர்களுக்கு எப்போதும் துணை நிற்பார்கள்.

”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

9 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து பா.ஜ.க தலைவைர் அண்ணாமலை பேச எந்த அருகதையும் இல்லை.

ஆளுநரின் அத்துமீறல்கள் குறித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories