தமிழ்நாடு

2 ஆண்டுகள்.. உழவர்களுக்கு திமுக அரசு செய்தது என்ன?: வேளாண் வணிகத் திருவிழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னையில் வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2 ஆண்டுகள்.. உழவர்களுக்கு திமுக அரசு செய்தது என்ன?: வேளாண் வணிகத் திருவிழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா 2023-ல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான வேளாண் வணிகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும் அவருக்கு துணையாக நின்று செயல்படும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். வேளாண் துறை என்பது மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. மக்களின் உயிரோடு தொடர்புடையது. ஒரு நாட்டிம் செழிப்பின் அளவுகோலாக இருப்பது வேளாண் துறையாகும்.

2 ஆண்டுகள்.. உழவர்களுக்கு திமுக அரசு செய்தது என்ன?: வேளாண் வணிகத் திருவிழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர்!

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான் - என்று பாடினார். எனவே ஆட்சியாளர்களாகிய நாங்கள் பெயர் பெறவேண்டுமானால்

உழவர்கள் உரிய மரியாதையையும் சிறப்பையும் வளத்தையும் பெற வேண்டும்.

உண்மையில் கடந்த இரண்டாண்டு காலமாக உழவர்கள் உள்ளத்தில் மலர்ச்சியைப் பார்க்கிறேன்.

கழக அரசு அமைந்ததும் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.

* கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

* முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்

* விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்

* நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம்

* வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை

* மண்வள மேலாண்மை

* இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குதல்

- ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* உணவு தானிய உற்பத்தில் மகத்தான சாதனை செய்யப்பட்டுள்ளது. 120லட்சம் மெட் ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட 11 சதவிகிதம் இது அதிகம் ஆகும்.

2 ஆண்டுகள்.. உழவர்களுக்கு திமுக அரசு செய்தது என்ன?: வேளாண் வணிகத் திருவிழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர்!

* காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய ஜூன் 12 ஆம் தேதியோ - அதற்கு முன்போ மேட்டூர் அணையைத் திறந்து விட்டுள்ளோம். இது மிகப் பெரியசாதனையாகும்.

* காவிரி டெல்டா உழவர்களுக்காக 61 கோடிக்கு குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தை வழங்கினோம்.

* அரிசி மட்டுமல்லாமல் சிறுதானிய உற்பத்தியிலும், பயறு உற்பத்தியிலும் சாதனை படைத்துள்ளோம்.

* பருத்தி, தென்னை என அனைத்திலும் கவனம் குவிக்கப்பட்டது.

* உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், கடன் வழங்குதல், மானியம் வழங்குதல் ஆகியவற்றில் அக்கறையுடன் செயல்பட்டோம்.

காவிரி டெல்டா பகுதியை அக்கறையோடு கவனித்தோம்.

காவிரி டெல்டா பகுதியின் வேளாண் வளர்ச்சிக்கும் இப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர்வாருவதற்கும் முன்னுரிமை அளித்தோம்.

வேளாண்மை என்பது வாழ்க்கையாக - பண்பாடாக இருந்தாலும் அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் மாறவில்லை.

அப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைப்பதால் தான் வேளாண் வணிகத் திருவிழாவை நடத்துகிறது. இது அக்ரி எக்ஸ்போ அல்ல - அக்ரி பிசினஸ் எக்ஸ்போ ஆகும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories