தமிழ்நாடு

சாலையில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்த தொழிலதிபர்.. ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிரடி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்த தொழில் அதிபர்களுக்கு ரூ.20,000 வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சாலையில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்த தொழிலதிபர்.. ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் மலைப்பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், உணவு தேடி யானைகள் காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் காட்டு யானை ஒன்று நெடுஞ்சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாகச் சொகுசு காரில் வந்த இருவரை யானையைப் பார்த்ததும் உற்சாகமடைந்து காரை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் யானை அருகே சென்று செல்ஃபி எடுத்துள்ளனர். இதனால் யானை சற்று பதற்றமடைந்து வேகமாக நடந்தது. இருப்பினும் அவர்கள் யானையை விடாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

சாலையில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்த தொழிலதிபர்.. ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிரடி!

இவர்களின் இந்த செயலால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து உடனே வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சொகுசு காரில் வந்த இருவரிடத்திலும் விசாரணை நடத்தினர்.

இதில், தெலுங்கானா மாநிலம், நிஜாம்பேட் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார், ஷ்யாம் பிரசாத் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அபராத தொகையைச் செலுத்திய பிறகு இருவரையும் போலிஸார் எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories