தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்.. காப்பாற்ற முயன்ற தந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் இரங்கல்!

நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்.. காப்பாற்ற முயன்ற தந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் அபினேஷ் (15). அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இவர், அதே பள்ளியில் படிக்கும் தனது நண்பர்களான கம்மாளப்பட்டியை சேர்ந்த நிதீஷ்குமார் (15), சமத்துவபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (13) ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார். அங்கிருந்து தங்களது இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் 3 பேரும் சாலை ஓரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இவர்கள் பின்னாலே மற்றொரு வாகனத்தில் வந்த குப்புசாமி (58), அசோக்குமார் (38), சரவணன் (35) ஆகிய 3 பேரும், இதனை கண்டதும் அதிர்ந்தனர். உடனே அந்த சிறுவர்களை காப்பற்றுவதற்கு கிணற்றுக்குள் குதித்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்.. காப்பாற்ற முயன்ற தந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் இரங்கல்!

தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதில் இதில் அபினேஷ், நிதீஷ்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இருப்பினும் விக்னேஷை காப்பற்ற இயலவில்லை. அதுமட்டுமின்றி சிறுவர்களை காப்பற்ற கிணற்றுக்குள் குதித்த குப்புசாமி, அசோக் குமார், சரவணன் ஆகிய 3 பேரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து இதுகுறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரிந்து வந்த ராசிபுரம் காவல்துறை, தீயணைப்புறையினரின் உதவியுடன் கிணற்றில் மூழ்கி 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் 4 பேரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்.. காப்பாற்ற முயன்ற தந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் இரங்கல்!

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவர்களை காப்பாற்ற முயன்ற தந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், "நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆயில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மெட்டாலா நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் நிதிஷ்குமார், அபினேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக 130 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தனர், இதைப் பார்த்த கணவாய்ப்பட்டியைச் சேர்ந்த திரு.குப்புசாமி, த/பெ.இடும்பன் (வயது 45), திரு.அசோக்குமார், த/பெ.மாரிமுத்து (வயது 35) மற்றும் சரவணன், த/பெ.கந்தசாமி (வயது 35) ஆகியோர் கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்க கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளனர்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்.. காப்பாற்ற முயன்ற தந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் இரங்கல்!

இந்த மீட்புச் சம்பவத்தில் திரு.குப்புசாமி, த/பெ.இடும்பன் (வயது 45), திரு.அசோக்குமார், த/பெ.மாரிமுத்து (வயது 35) மற்றும் சரவணன், த/பெ.கந்தசாமி (வயது 35) மற்றும் சிறுவன் விக்னேஷ் (வயது 15) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் செல்வன். நிதிஷ்குமார், த/பெ.கண்ணன் (வயது 15) மற்றும் செல்வன். அபினேஷ், த/பெ.குப்புசாமி (வயது 15) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories