தமிழ்நாடு

நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்?.. விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிப்பவர்கள், அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்?.. விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் புலியூர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற வரும் மருத்துவ சேவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு முகாமிலும் 2000 மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்?.. விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

தி.மு.க அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு இன்னுயிர் காப்போம் 48 என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1.67 லட்சம் நபர்கள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர் கட்சியினர் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்குத் தெரியக்கூடும். வெளிப்படைத்தன்மை உடன் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையிலா செய்ய முடியும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories