தமிழ்நாடு

”அமலாக்கத்துறையை கொண்டு தி.மு.கவை பயமுறுத்த முடியாது”.. ஒன்றிய அரசை சாடிய கனிமொழி MP!

அமலாக்கத்துறையை கொண்டு தி.மு.கவை பயமுறுத்த முடியாது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

”அமலாக்கத்துறையை கொண்டு தி.மு.கவை பயமுறுத்த முடியாது”.. ஒன்றிய அரசை சாடிய கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தேனாம்பேட்டையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு விழா நடப்பெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மற்றும் தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி MP "இன்று இருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க அரசால் தாக்குதலை சந்திப்பது மக்கள் மட்டும் இல்லை அரசியலமைப்பு சட்டமும் தான் என்று சொன்னால் அது மிகை இல்லை. ஜனநாயகத்தின் மீது அரசியல் அமைப்பு பிரதிநிதிகளின் மீது என்ன மரியாதை இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி பேசக்கூடிய இடத்தில் இருக்கிற ஒருவர் தன்னுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார். மணிப்பூர் பிரச்சனையைச் சரி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற சூழல்தான் உள்ளது. இதற்கு என்ன காரணம் மத அடிப்படையில் இருக்கக்கூடிய காழ்ப்புணர்ச்சி தான்.

”அமலாக்கத்துறையை கொண்டு தி.மு.கவை பயமுறுத்த முடியாது”.. ஒன்றிய அரசை சாடிய கனிமொழி MP!

பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கிற எல்லா மாநிலத்திலும் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் கொண்டு வருவதுதான் அவர்களுடைய எண்ணம். இன்றைய அரசியலமைப்பு சட்டம், வாழ்க்கை, பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றமாற்ற வேண்டும் என்பவர்களின் ஆட்சி தொடர்ந்தால் நாட்டிற்கும் நமது எதிர்காலத்திற்கும் எந்தெந்த பாதுகாப்பும் இருக்காது.

”அமலாக்கத்துறையை கொண்டு தி.மு.கவை பயமுறுத்த முடியாது”.. ஒன்றிய அரசை சாடிய கனிமொழி MP!

இதையெல்லாம் முறியடிக்கக் கூடிய வகையில் தான் நேற்று பாட்னாவில் நடந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் எல்லாம் ஒரு அணியில் திரண்டு ஆட்சியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் சேர்ந்துள்ளதை நாம் பார்த்தோம். நிச்சயமாக வரக்கூடிய தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட துறைகளை வைத்து தமிழ்நாட்டையும், தி.மு.கவையும் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுகிறது. தி.மு.க இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் அல்ல" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories