தமிழ்நாடு

நாளை முதல் 500 மதுபான கடைகள் மூடல்.. மண்டல வாரியாக பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !

நாளையிலிருந்து 500 மதுபான கடைகள் உடனடியாக மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாளை முதல் 500 மதுபான கடைகள் மூடல்.. மண்டல வாரியாக பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மண்டல வாரியாக பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணையை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

நாளை முதல் 500 மதுபான கடைகள் மூடல்.. மண்டல வாரியாக பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !

இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 138 மதுக்கடைகளும், கோவை மண்டலத்தில் 78 கடைகளும், மதுரை மண்டலத்தில் 125 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 மதுக்கடைகளும் என 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படுகிறது.

மேலும் மூடப்படவுள்ள கடைகளின் பணியாளர்களை வேறு இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருந்த மதுக்கடைகள் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories