சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவி'யை அகற்றக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முதலாவதாக கையெழுத்திட்டார்.
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என். ரவி'ஐ பதவி நீக்கம் செய்ய இந்திய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் வகையில் நடத்தப்படும் இக்கையெழுத்து இயக்கம் இன்று துவங்கி ஜூலை 20ஆம் தேதி வரை(ஜூலை 20ஆம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, "ஆளுநர் ரவிக்கு எதிரான தீர்மானம் மிகவும் அவசியமான ஒன்று. இத்தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. ஆளுநர் ரவி"க்கு எதிரான தீர்மானத்தில் முதலாவதாக கையெலுத்திடுவதில் நான் பெருமையாக கருதுகிறேன்.
சாதி மத பாகுபாடின்றி மதசார்பற்ற முரையில் ஒரு இயக்கத்தை நடத்த வேண்டும். ஆனால் இவ்வியக்கங்களுக்கு எதிராக தன்னிட்சையாக ஆளுனர் செயல்பட்டு வருகிறார். நாள்தோறும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தன்னிட்சையான் முடிவுகளை ஆளுநர் எடுத்து வருகிறார். தனி ஆதிக்கத்தை வைத்து கொண்டு தவறான நடவடிக்கைகளை ஆர்.என் ரவி செய்து வருகிறார். சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்" என்று விமர்சித்துள்ளார்.