கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் பகுதியில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள குடியிருப்பில் 13 அடி நீள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.
இந்த ராஜநாகத்தைப் பார்த்த மக்கள் பீதியடைந்து உடனே வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் பாம்பைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் பாம்பு போக்குக் காட்டிக் கொண்டே இருந்தது.
இதையடுத்து 3 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு ராஜநாகத்தின் தலையை அழுத்திப் பிடித்து அதைச் சாக்குப்பையில் போட்டு அடைத்தனர். பிறகுதான் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
பின்னர் பிடிபட்ட ராஜநாகத்தை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடப்பட்டது. இதேபோன்று தடிக்காரண்கோணம் பகுதியில் 12 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.