தமிழ்நாடு

திருவிழாவில் போட்டி.. கபடி விளையாடிய சிறுவன் திடீரென சுருண்டு விழுந்து பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !

கோயில் திருவிழாவில் கபடி போட்டியின்போது விளையாடிய வீரர் எதிர்பாராத நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் காரைக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழாவில் போட்டி.. கபடி விளையாடிய சிறுவன் திடீரென சுருண்டு விழுந்து பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் அமைந்துள்ளது செஞ்சை மாரியம்மன் கோயில். இங்கு தற்போது திருவிழா நடைபெறுவதால் ஊரில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதில் கபடி போட்டியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

திருவிழாவில் போட்டி.. கபடி விளையாடிய சிறுவன் திடீரென சுருண்டு விழுந்து பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !

இந்த போட்டியில் காரைக்குடி வைத்திலிங்கபுரம் பகுதியை சேர்ந்த யோகமுனிஸ்வரன் என்ற அணியும், அதே பகுதியை சேர்ந்த கிரிஷ் பிரதர்ஸ் என்ற அணியும் மோதிக்கொண்டன. இதில் அதிக புள்ளிகள் பெற்று கிரிஷ் அணியினர் முன்னிலையில் இருந்த நிலையில், மற்றொரு அணி சார்பாக காரைக்குடி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்ற 16 வயது சிறுவன் களமிறங்கினார்.

திருவிழாவில் போட்டி.. கபடி விளையாடிய சிறுவன் திடீரென சுருண்டு விழுந்து பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !

இவர் ரெய்டு செல்லும்போது எதிரணியினர் பிரதாப்பை மடக்கி பிடித்தனர். எதிரணியினர் பிடித்ததில் நிலநடுமாறிய பிரதாப் கீழே விழுந்தார். பின்னர் அவர் வெளியே சென்று அமர்ந்திருக்கும் போது சிறுது நேரத்தில் மயங்கியுள்ளார். பிரதாப் மயக்கமடைந்ததை கண்ட அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

ஆனால் அப்படியும் கண் திறக்காததால் உடனடியாக அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதாப்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.

திருவிழாவில் போட்டி.. கபடி விளையாடிய சிறுவன் திடீரென சுருண்டு விழுந்து பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !

பின்னர் பிரதாப்பின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் திருவிழாவில் கபடி போட்டியின்போது விளையாடிய வீரர் எதிர்பாராத நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை - கபடி வீரர்
குளித்தலை - கபடி வீரர்

முன்னதாக இதே போல் குளித்தலை அருகே நடந்த கபடி போட்டியில் பங்கேற்ற இளம் வீரர் ஒருவர் மைதானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி குஜராத்தில் கடந்த 2 மாதமாக 8 நபர்கள் கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories