தமிழ்நாடு

விடுதி மாணவர்களுக்கு வினா -வங்கி: பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன ?

விடுதி மாணவர்களுக்கு வினா -வங்கி:  பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆர்‌.எஸ்‌.ராஜகண்ணப்பன்‌ புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

விடுதி மாணவர்களுக்கு வினா -வங்கி:  பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன ?

பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 1௦ மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவ;மாணவியருக்கு 25 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ வினா -வங்கி வழங்கப்படும்‌.

290 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ கல்லூரி

விடுதிகளுக்கு 1 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ இடியாப்ப அச்சு இயந்திரம்‌ வழங்கப்படும்‌.

368 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளி மாணவியர்‌விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்‌ 75 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌.

விடுதி மாணவர்களுக்கு வினா -வங்கி:  பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன ?

பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌மற்றும்‌ சிறுபான்மையினர்‌ மாணவ,மாணவியர்‌ விடுதிகளில்‌ தூய்மைப்‌பணிகளுக்காகவும்‌, சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்‌ 5 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌.

385 பிற்படுத்தப்பட்டோர்‌,பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌மற்றும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளி மாணவியர்‌ விடுதிகளுக்கு 1 கோடியே 56 இலட்சத்து 44 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ 111 தொலைக்காட்சி இணைப்புடன்‌ வழங்கப்படும்‌.

290 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ கல்லூரி விடுதிகளில்‌ தங்கிப்‌ பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு ஆங்கில வழி பேச்சாற்றல்‌ மற்றும்‌ தனித்திறன்‌ வளர்க்கும்‌ பயிற்சி தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டு கழகம்‌ மூலம்‌ வழங்கப்படும்‌.

மலை பிரதேசங்களில்‌ செயல்பட்டுவரும்‌ 2௦ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ விடுதிகளுக்கு நீர்‌ கொதிகலன்‌ (286) 10 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌.

விடுதி மாணவர்களுக்கு வினா -வங்கி:  பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன ?

12 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌சிறுபான்மையினர்‌ மாணவியரின்‌ விடுதிகளில்‌ மாணவியர்‌ பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா 12 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌பொருத்தப்படும்‌.

141 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ கல்லூரி மாணவியர்‌ விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ மாணவியருக்கு 45 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ சுகாதார குட்டை தகளிகள் வழங்கப்படும்‌.

பிற்படுத்தப்பட்டோர்‌ நல இயக்ககம்‌ மற்றும்‌ மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நல இயக்ககங்களுக்கு ஒரு சட்ட அலுவலர்‌ பணியிடம்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ 6 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ தோற்றுவிக்கப்படும்‌.

banner

Related Stories

Related Stories