தமிழ்நாடு

”உலகத்துக்கே எடுத்துக்காட்டும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்”: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!

உலகத்துக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளது எனஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

”உலகத்துக்கே எடுத்துக்காட்டும்  முதலமைச்சரின் காலை உணவு திட்டம்”: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முனைவர் விஜய் அசோகன் எழுதிய "நோர்டிக் கல்வி - சமத்துவமும் சமூகநீதியும்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அன்பு மகேஸ் பொய்யாமொழி, "தி.மு.க என்பது அரசியல் கட்சி அல்ல. தி.மு.க ஒரு மக்கள் இயக்கம். நடைபாதை கல்வி மூலமாக கல்வி அரிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நாடாக நார்வே நாடு உள்ளது. அதே போன்று தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பாட்டு வருகிறது.

”உலகத்துக்கே எடுத்துக்காட்டும்  முதலமைச்சரின் காலை உணவு திட்டம்”: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!

உலகத்துக்கே எடுத்துக்காட்டும் திராவிட மாடல் அரசு கொண்டுவந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பசியில்லாமல் வகுப்பறையில் அமர்கிறார்கள்.

தற்பொழுது வெளியிட்டுள்ள நூல் கல்வியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். நார்வே பின்லாந்து ஆகிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக்கான திட்டங்களை அறிவதற்கு இப்புத்தகம் பயன்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தமிழ்நாட்டில் உள்ள அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மீண்டும் பள்ளிக்கு மாணவர்களை தி.மு.க அழைத்து வந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories