தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இந்த விவாத்ததின் போது பேசிய தருமபுரி பா.ம.க எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் அணி போல விளம்பரம் செய்து வர்த்தக லாபம் அடைகிறது. தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத அந்த அணியை அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இதற்கு நேர் மாறாக பேசிய எஸ்.பி.வேலுமணி, ஐ.பி.எல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏக்களுக்கு ஐபிஎல் பாஸ் வழஙக்ப்பட்டது. ஐ.பி.எல் போட்டியை பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 300 பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அ.தி.மு.க-வுக்கு பாஸ் கிடைக்கவில்லை. அதோடு தங்களுக்கு டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; 4 வருடங்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் இப்போதுதான் ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது. அப்படி இருக்கையில் நீங்கள் யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தீங்க.?உங்க நண்பர் அமித்ஷாவின் மகன் BCCI செயலாளர் ஜெய்ஷாதான் ஐ.பி.எல் போட்டியை நடத்துகிறார்.
நீங்கள் சொன்ன கேட்பாங்க, அவர்களிடம் பேசி அனைத்து அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கு 5 டிக்கெட் வாங்கிக்கொடுங்க.. காசு கொடுத்தே வாங்கிக்கறோம்” என ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.