தமிழ்நாடு

ஆருத்ரா மோசடி: தலைமறைவாக இருக்கும் 5 நிர்வாகிகள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்.. போலிஸார் அறிவிப்பு!

ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் 5 பேரை பிடித்துக்கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என போலிசார் அறிவிட்டுள்ளனர்.

ஆருத்ரா மோசடி: தலைமறைவாக இருக்கும் 5 நிர்வாகிகள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்.. போலிஸார் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் தற்போது பா.ஜ.கவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்துனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரிஷ் எந்தவித சொந்த வருமானமும் அவருடைய பெயரில் இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் முடக்கி உள்ளனர்.

ஆருத்ரா மோசடி: தலைமறைவாக இருக்கும் 5 நிர்வாகிகள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்.. போலிஸார் அறிவிப்பு!

அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். அவரிடமும் ஹரிஷிடமும் விசாரணை நடத்தியதில், இந்த மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ஆர்.கே.சுரேஷ் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வழக்கை ஒன்றிய அரசின் மூலம் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்துள்ளார். அந்தப் பணத்தின் மூலம் அதிகாரிகளிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆர்.கே.சுரேஷ் பணத்தை திருப்பி ஒப்படைக்க வில்லை என ரூசோ விசாரணையின் போது வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா மோசடி: தலைமறைவாக இருக்கும் 5 நிர்வாகிகள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்.. போலிஸார் அறிவிப்பு!

இதனிடையே ஆருத்ரா மோசடி வழக்கை போலிஸார் விசாரிக்க தொடங்கியதுமே ஆர்.கே.சுரேஷ் சுற்றுலாவுக்காக துபாய் சென்றுள்ளார். ஆனால் வழக்கில் இருந்து தப்பிக்க அங்கேயே தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அவரை .சென்னை அழைத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த மோசடி வழக்கில், லட்ச கணக்கான மக்களிடம் ரூ.2438 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் எஞ்சிய 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கண்டு பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

harish
harish

இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தியில், "ஆரூத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குறித்து சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வரப்பெற்றது. அதன் அடிப்படையில் பொருளாதாரக் குற்றப் பிரிவு, சென்னை குற்ற எண் 07/2022. ச/பி 420, 406, 409, 120(B) 34, 109 1PC, 3, 5, 21(1), 21(2), 21(3), 23, 25 of BUDS Act, 2019, 58(B) of RBI Act 1934 & 5 of TNPID Act, 1997 சட்டப்பிரிவுகளின்படி 20.05.2022 அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டு சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு விசாரணை சம்பந்தமாக 24.05.2022 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களிலும் மொத்தம் 57 ங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தலைமறைவான குற்றவாளிகள்
தலைமறைவான குற்றவாளிகள்

இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சுமார் 1,09,255 பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்தத் தொகை சுமார் ரூ.2438 கோடி (இரண்டாயிரத்து நானூற்று முப்பத்து எட்டு கோடி) என தெரியவருகிறது.

இதுவரை இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 16 குற்றவாளிகளில் 11 குற்றவாளிகள் (A.7 பாஸ்கர் A.9 மோகன்பாபு, A10. செந்தில்குமார், A.11 பட்டாபிராம், A12. மைக்கேல்ராஜ், A14 ஹரீஷ், A18 பேச்சிமுத்துராஜ் என்ற ரபீக், A19 ஐயப்பன், A20 ரூசோ, A21 நாகராஜ். A22. J. மாலதி) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

V.ராஜசேகர் (வில்லிவாக்கம்) ; உஷா (திருவள்ளூர்) ; தீபக் கோவிந்த் பிரசாத் (திருமால் நகர், பூந்தமல்லி) ; நாரயாணி (பூம்புகார் நகர், சென்னை 99) ; ருமேஷ் குமார் (செட்டிபுனியம், செங்கல்பட்டு). ஆகிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.

ஆருத்ரா மோசடி: தலைமறைவாக இருக்கும் 5 நிர்வாகிகள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்.. போலிஸார் அறிவிப்பு!

தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுதியான தகவல்களாக இருப்பின் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கவேண்டிய முகவரி :

>> காவல் கண்காணிப்பாளர்,

தலைமையிடம்,

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,

காவலர் பயிற்சி கல்லூரி,

அசோக் நகர், சென்னை.83.

தொலைபேசி எண்.044 22504311

>> கட்டுப்பாட்டு அறை.

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,

காவலர் பயிற்சி கல்லூரி,

அசோக் நகர், சென்னை.83.

தொலைபேசி எண்.044 22504332

banner

Related Stories

Related Stories