பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததில் இருந்து, தற்போது வரை தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றால்லாம் கதை விட்டு வந்தார். அரசியல் கட்சித் தலைவர்களை விமரசனம் என்ற பெயரில் அவர்களின் ஆடைகளின் விலையைப் பற்றி விமர்சிர்த்ததே பா.ஜ.கவினர்தான். ஆனால் அப்போதெல்லாம் பொங்காத அண்ணாமலை, இன்று அவருக்கு அதேவிமர்சனம் என்றதும் அலறுகிறார்.
சமீபத்தில் ராகுல் காந்தி ஆடையில் விலையை பா.ஜ.கவினர் கேள்வி எழுப்பினர். அப்போது சமூக வலைதளங்களில் மோடி அணியும் ஆடைகள் பற்றிய விலையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், தற்போது அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, நான் தேசியவாதி. ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட வாட்ச்சை கட்டியிருக்கின்றேன். உலகத்துலேயே 500 வாட்ச்கள் தான் இருக்கு, என்னோடது 149 வாட்ச். மேலும் இதுதொடர்பான அனைத்து ஆவணங்களை வெளியிடுவேன் என்றார். குறிப்பாக ஏப்ரல் 1ம் தேதி வாட்ச் பில்லை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
அதற்குள் இடையில் சொந்தக் கட்சிக்காரகள் முன்னிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக நாடகமெல்லாம் நடத்தி காட்டிய அண்ணாமலை வாட்ச் பில் பற்றி மறந்துப்பார் போல, ஆனால் ஏப்ரல் 1ம் தேதி இன்று பிறந்ததுமே காலை முதலே ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அண்ணாமலையிடன் வாட்ச் பில் கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன.
குறிப்பாகதி.மு.க மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விடியும் போது ஏப்ரல்-1 மானஸ்தன் அரசியல் கோமாளி Mr ex officer அண்ணாமலை வேற ஆடு வித்த காசுல வாங்குன watch bill-ல வேற கொடுப்பாரு எப்படி சாமாளிப்பது!!!🙆🏻♂️” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நெட்டிசன்கள் ட்விட்டரின் ஏப்ரல் 1 ஆச்சி, அண்ணாமலை வாட்ச் பில்லு என்னாச்சி?, அண்ணாமலை வாட்ச் பில் எப்போது கொடுப்பீர்கள் என பல மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். ஆனால் தற்போது வரை அண்ணாமலை வாட்ச் பில் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தகது.