தமிழ்நாடு

’அய்யோ என்னை விட்ருங்க’.. ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் கருப்பு உடையில் வந்து சிக்கலில் மாட்டிய வானதி !

’ஆளை விடுங்கடா சாமி’ என்ற படி சட்டபேரவைக்குள் வானதி சீனிவாசன் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

’அய்யோ என்னை விட்ருங்க’.. ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் கருப்பு உடையில் வந்து சிக்கலில் மாட்டிய வானதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற மக்களைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியிருந்தார்.

இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் சர்ச்சையை எழுப்பினர். பிறகு குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

’அய்யோ என்னை விட்ருங்க’.. ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் கருப்பு உடையில் வந்து சிக்கலில் மாட்டிய வானதி !

இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்தது.

இதனைத் தொடந்து ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்தது. சூரத் நீதிமன்றம் 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்த தகவல் வெளியானதும் பல்வேறு தரப்பினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கறுத்து தெரிவித்து வருகின்றனர்.

’அய்யோ என்னை விட்ருங்க’.. ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் கருப்பு உடையில் வந்து சிக்கலில் மாட்டிய வானதி !

மேலும், இந்த ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதோடு ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்து பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்தில் பங்கேற்க வந்தனர். அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கருப்பு சேலை அணிந்து சட்டமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து கருப்பு உடை அணிந்து வந்துள்ளீர்களா என கேட்டதும்தான் அவருக்கு நிலைமை புரியவந்தது.

’அய்யோ என்னை விட்ருங்க’.. ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் கருப்பு உடையில் வந்து சிக்கலில் மாட்டிய வானதி !

அதன்பின்னர் 'எதேச்சையாக கருப்பு உடை அணிந்து வந்துட்டேன்' எனக் கூறி சமாளித்தார். அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வானதி சீனிவாசனின் தோளில் தட்டி அவரிடம் நீங்களும் எங்க சைடு தானா எனகே கேட்க ஆளை விடுங்கடா சாமி என்ற படி சட்டபேரவைக்குள் வானதி சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories