தமிழ்நாடு

”பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா”.. ’அசுரன்’ பட வசனத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்!

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.47,266 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

”பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா”.. ’அசுரன்’ பட வசனத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் மற்ற எல்லா துறைகளை காட்டிலும் கல்வி துறைக்கு மட்டும் ரூ.47,266 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு வெளிப்படுத்தியுள்ளது.

”பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா”.. ’அசுரன்’ பட வசனத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்!

இதையடுத்து தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட ”பேராசிரியர் அன்பழகனார் பள்ளி-பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டங்கள்- குடிமைப்பணி தேர்வர்களுக்கு பயிற்சி உதவித்தொகை எனப் பார்த்துப் பார்த்து கல்விக்கான திட்டங்களைத் தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் பட்ஜெட்டை போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜேஷ் என்ற இணையவாசி ஒருவர் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை பாராட்டி தனது சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்லுறது ஒண்ணே ஒன்னுதான்.

படிங்கப்பா, படிங்கம்மா. பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா. மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.

Fiscal Deficit ஐ 50% குறைச்சதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லை. அது நிதியமைச்சரோட goals ல ஒன்னு. ஆனா... கல்விக்கான ஒதுக்கீடுகள் தான் இந்த பட்ஜெட் ல கவனிக்க வேண்டிய விஷயம். மேம்போக்கா நிதி ஒதுக்கீட்டு போகாம, அடிப்படை கல்விக்கான challenges என்னென்ன என்பதை நன்றாக ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பட்ஜெட் allocation கல்வி, மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக செய்யப் பட்டுள்ளது.

கல்விக்கான ஒதுக்கீடு (உயர்கல்வி உட்பட), கல்வி கற்று வரும் மாணாக்கருக்கு வேலை வாய்ப்பு தருவதற்கான தொழிற்துறை முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள், மகளிர் சுய உதவிக் குழு மூலம் சொந்த தொழில் தொடங்க கடனுதவி, SIPCOT மூலம் வேலைவாய்ப்பு என்று ஒரு better நீண்ட கால forward-looking budget இது. சமூக நீதிக்கான ஆட்சியில், அச் சமூக நீதிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்ய வழிவகை செய்யப் பட்டிருக்கிறது இந்த பட்ஜெட்டில். கல்விக்கு மட்டும் சுமார் ₹60,000 கோடி ஒதுக்கீடு. இவை அனைத்தும் அரசு பள்ளிகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி மட்டுமல்லாது, தொழிற்துறை வளர்ச்சிக்கு ஒதுக்கீடு, அதற்க்கேற்ற பெருகப்போகும் மின்சார தேவைகளை கணக்கில் கொண்டு 14,500 மெகா வாட் மின் உற்பத்திக்கு சுமார் ₹77,000 கோடி ஒதுக்கீடு என்பன போன்ற பல்நோக்கு திட்டங்களுக்கு இந்த பட்ஜெட் இடமளித்துள்ளது.

Overall, திமுக அரசின் சமூக நீதி கொள்கைகளை சரியாக உள்வாங்கி அதற்கேற்றவாறு இந்த பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.படிங்க. படிக்க வைங்க" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories