உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் அங்கீதா விஸ்வநாத். இளம்பெண்ணான இவர், உத்தர பிரதேசத்தில் துணை நடிகையாக உள்ளார். இவருக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் ஆண் நண்பராக உள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய நிலையில், மகா சிவராத்திரிக்காக தமிழ்நாடு வர எண்ணியுள்ளனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் இருந்து கோவைக்கு சென்றுள்ளனர். அங்கே இருவரும் ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்த இவர்கள், ஒரு கார் மூலம் அந்த பகுதியை சுற்றி பார்த்துள்ளனர். அதன்படி இவர்கள் மதுரைக்கும் வந்துள்ளனர். இங்கே சில இடங்களை சுற்றி பார்த்த இவர்கள், நேற்று இராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டனர்.
அப்போது மதுரையிலுள்ள பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இவர்கள் தங்கள் காரை நிறுத்தி காருக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் சாலையில் இறங்கி நடு ரோட்டில் வைத்து சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் சண்டையால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்படவே, அந்த பகுதி போலீசார் விரைந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினர். அதோடு துணை நடிகை அங்கீதா, தனது ஆண் நண்பர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதாவது அங்கீதாவின் ஆண் நண்பர் நிதிஷ் குமார், தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், தன்னிடம் இருந்த பணத்தை திருடி செல்ல முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆனால் அங்கீதாவின் குற்றத்தை நிதிஷ் அறவே மறுத்தார். அதோடு இருவரும் மாறி மாறி புகார் தெரிவித்தனர். இதையடுத்து வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இரண்டு பேரையும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
மேலும் அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை புகைப்படம் எடுத்துக்கொண்ட போலீசார், அவர்களை திரும்ப அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனவும், இனி வேறு எங்காவது இதுபோல் தகராறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.