இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திகழ்கிறது. 1972-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தற்போதுவரை மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
காலத்துக்கு ஏற்ப நவீன வசதிகளோடு தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்துகள் ஒவ்வொரு முறையில் புதுப்பிக்கப்பட்டு தனியார் பேரூந்துகளோடு போட்டிபோடும் அளவு முன்னேறியுள்ளன. பயணிகள் வசதிக்காக சமீபத்தில் படுக்கை வசதி கொண்டு பேருந்துகள் கூட தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன.
கிராமப்புறங்களை நகரங்களோடு இனிக்கும் போக்குவரத்து கழக பேருந்துகள் பயணிகள் வசதிக்காக கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை பின்பற்றி பிற மாநிலங்களிலும் அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த சௌதா மணி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசின் பேருந்துகள் பழையதாக இருப்பதாகவும், அதே நேரம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கர்நாடக அரசின் புதியதாக இருப்பதாகவும் கூறி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
ஆனால், அதே நேரம் அவரின் பதிவுக்கு பதிலளித்த இணையவாசிகள் தமிழ்நாடு அரசின் புதிய சொகுசு பேருந்துகளின் புகைப்படத்தை பதிவிட்டு இது எல்லாம் கண்ணுக்கு தெரியாதா என பதிலடி கொடுத்தனர். மேலும், சௌதா மணி பகிர்ந்திருந்த புகைப்படத்தில் இருக்கும் பேருந்து அதிமுக காலத்தை சேர்ந்தது என்றும், அதில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை வைத்து கூறினார்.
அதேபோல விஸ்வநாதன் என்ற இணையவாசி அந்த பேருந்து ஜெயலலிதா காலத்து பேருந்து என்றும், "சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை ஓசூர் அருகே யானை கூட்டம் ஒன்று தாக்கியதில் முன்புறம் சிறிது சேதமடைந்தது, பெங்களூர் பனிமனை வரை டிரைவர் சாமர்த்தியமாக வண்டியை கொண்டு சென்றார்" என அந்த சம்பவத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.