திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கலைஞர் நகரில் மோடி காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி அப்பகுதி பாஜகவினர், மக்களை ஏமாற்றி பாஜகவில் இணைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில் மக்களிடம் பா.ஜ.க.வை சென்று ஒன்றிய கவுன்சிலர் நாகமாணிக்கம் என்பவர் மோடி காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கூறி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார்.
பின்னர் அவர் மக்களிடம் சில விவரங்களை கேட்டுவிட்டு, தங்களுடைய செல்போனுக்கு OTP வரும் அதை கூறுங்கள் என்று கூறியுள்ளார் மக்கள் அந்த OTPயை கூறியவுடன் தாங்கள் பாஜகவில் இணைந்ததற்கு நன்றி என்று குறுந்தகவல் வந்துள்ளது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்ட அந்த நிர்வாகி உடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அந்த நிர்வாகி நாங்கள் என்னதான் கட்சியில் சேர்த்தாலும் மக்கள் எங்களுக்கு ஓட்டு போடவா போகிறார்கள்.
நூறு வருடம் ஆனாலும் பா.ஜ.க.விற்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறியவர், நாங்கள் இதை செய்ய வேண்டும் என்று மேல் இடம் சொல்லுகிறது, அதை நாங்கள் செய்கிறோம் என பதில் அளித்துள்ளார்.
எனினும் விடாது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என கூறி அந்த நிர்வாகியை அப்பகுதியிலிருந்து அனுப்பி வைத்தனர். மக்களிடம் தவறான ஒரு தகவலை அளித்து அவர்களை பா.ஜ.க.வில் இணைத்து வருவது அப்பகுதி மக்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.