தமிழ்நாடு

எங்கள் குழந்தைகள் NEET தேர்வு எழுத வேண்டும் என சொல்வதற்கு அவர்கள் யார்?.. சசி தரூர் கேள்விக்கு PTR பதில்!

நாட்டிலேயே 1000 பேருக்குத் தனிநபர் மருத்துவர்களைக் கொண்டது தமிழ்நாடு மட்டும்தான் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

எங்கள் குழந்தைகள் NEET தேர்வு எழுத வேண்டும் என சொல்வதற்கு அவர்கள் யார்?.. சசி தரூர் கேள்விக்கு PTR பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் மாத்ருபூமி பத்திரிக்கை சார்பில் சர்வதேச விழா (MBIFL 2023) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 'இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம்' என்ற தலைப்பில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்," நீட் தேர்வு குறித்த தற்போதைய சர்ச்சை தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்குத் தமிழில் தேர்வு எழுத உரிமை வேண்டும் என்றால் பரவாயில்லை. ஆனால் ஒரு நேர்த்தியான தேர்வு அவர்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் படிக்கவும், தயார் செய்யவும் மற்றும் வேலை செய்யவும் உதவும் என்ற விமர்சனங்களுக்கும் நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார்.

எங்கள் குழந்தைகள் NEET தேர்வு எழுத வேண்டும் என சொல்வதற்கு அவர்கள் யார்?.. சசி தரூர் கேள்விக்கு PTR பதில்!

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், நம் நாட்டிலேயே 1000 பேருக்குத் தனிநபர் மருத்துவர்களைக் கொண்டது தமிழ்நாடு மட்டும்தான். ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள். அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள், அதிக எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் என எல்லா வகையிலும் மருத்துவத்தில் தேசிய சராசரியை விட நாங்கள் மிகவும் முன்னேறி இருக்கிறோம்.

நாங்கள் சொன்னதெல்லாம் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு 100% நிதியுதவி செய்து கொண்டிருக்கும்போது, மற்ற பாடங்களைப் போலல்லாமல் குறைந்தபட்சம் இந்த அளவிற்கு மருத்துவக் கல்வி பொதுச் சுகாதாரத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. சரியா? மருத்துவமனை இல்லாமல் மருத்துவக்கல்லூரியை நடத்த முடியாது.

எங்கள் குழந்தைகள் NEET தேர்வு எழுத வேண்டும் என சொல்வதற்கு அவர்கள் யார்?.. சசி தரூர் கேள்விக்கு PTR பதில்!

மேலும் அரசு, பொதுச் சுகாதாரத்தை வழங்கும்போது நமது மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகள், கிராமப்புறங்கள் உட்பட ஒவ்வொரு பகுதியிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மற்றும் கிராமப்புறங்களில் எவ்வளவு சேவை செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் முதுகலை திட்டங்களில் நுழைவதற்கான ஊக்கத்தொகை என்று கட்டமைத்துள்ளோம்.

இது முற்றிலும் பொதுச் சுகாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாநில விஷயமாகும். எங்கள் குழந்தைகளை எங்கள் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு எந்த தேர்வு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்? அதுதான் எங்கள் கேள்வி.

தமிழ்நாட்டை விட இந்திய அரசு வியக்கத்தக்க வகையில் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளது என்றோ அல்லது வேறு சில மாநிலங்கள் சிறப்பான முடிவுகளைத் தந்துள்ளது என்றோ நீங்கள் என்னிடம் சொன்னால் சரி, நாங்கள் அதைக் கேட்டுக்கொள்கிறோம், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம். நாங்கள் சிந்திக்கும் மனிதர்கள். முயற்சிப்போம்.

நான் நாட்டில் தலைவராக இருக்கும்போது ஐந்தாம் இடத்தில் இருக்கும் மாணவன் வந்து நான் எப்படிப் படிக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்?. எந்த அர்த்தமும் இல்லை. அதனால் தான் எதிர்க்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories