தமிழ்நாடு

உங்களுக்கு ஒரு மொழி.. எங்களுக்கு மட்டும் 3 மொழி: மும்மொழி கொள்கையின் ஆபத்தை புட்டுபுட்டு வைக்கும் PTR!

இந்தியைத் தொண்டைக்குள் தள்ளினால் அது நடக்காது என தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு ஒரு மொழி.. எங்களுக்கு மட்டும் 3 மொழி: மும்மொழி கொள்கையின் ஆபத்தை புட்டுபுட்டு வைக்கும் PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் மாத்ருபூமி பத்திரிக்கை சார்பில் சர்வதேச விழா (MBIFL 2023) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 'இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம்' என்ற தலைப்பில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்," இந்தி கற்கும் சில குழந்தைகள் இருந்தால் என்ன? தமிழ்நாட்டின் நலன்களை அது எப்படிப் பாதிக்கிறது?. நீட் தேர்வு குறித்த தற்போதைய சர்ச்சை தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்குத் தமிழில் தேர்வு எழுத உரிமை வேண்டும் என்றால் பரவாயில்லை. ஆனால் ஒரு நேர்த்தியான தேர்வு அவர்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் படிக்கவும், தயார் செய்யவும் மற்றும் வேலை செய்யவும் உதவும். இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,"80,90 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அரசியலுக்கு இந்தி கட்டாயம் என்ற கருத்தை யாராலும் சீண்டமுடியாது. அத்தியாவசியமற்ற மொழி என்று நாங்கள் கருதும் சில மொழியை நீங்கள் கட்டாயப்படுத்தினால், அது ஒரு சருக்கைப்போல ஆங்கிலம் அல்லது தமிழ் இவ்விரண்டு மொழிகளுமே இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் தரநிலைக்குத் தள்ளிவிடும். எனவே தமிழ் அடையாளத்தின் அடிப்படையே எங்கள் மொழி.

உங்களுக்கு ஒரு மொழி.. எங்களுக்கு மட்டும் 3 மொழி: மும்மொழி கொள்கையின் ஆபத்தை புட்டுபுட்டு வைக்கும் PTR!

பெரும்பாலான கலாச்சாரங்களில் மொழி அவர்களின் அடையாளத்தின் மையமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த உணர்வில், பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல எனக்கு இருமொழி கொள்ளை இருந்தால் முதல் மொழியாகத் தமிழ் இருக்கும். ஏனென்றால் ஒவ்வொருவரும் முதலில் தங்களது தாய்மொழியை விரும்புகிறார்கள். அதன் பிறகு மாநிலங்கள், நாடுகள் கடந்து ஆங்கிலம் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது. இது உண்மையில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு மொழி.நான் வணிக ரீதியாக உலகில் போட்டியிடும்போது மதிப்பு சேர்க்கக்கூடியது அது.

நீங்கள் மும்மொழி கொள்கையை வலியுறுத்தினால், இந்தியப் பகுதியில் உள்ளவர்கள் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிக்க முடியாது.

உங்களுக்கு ஒரு மொழி.. எங்களுக்கு மட்டும் 3 மொழி: மும்மொழி கொள்கையின் ஆபத்தை புட்டுபுட்டு வைக்கும் PTR!

எனவே நீங்கள் உண்மையில் என்ன சொல்கிறீர்கள் என்றால் இந்தி மாநிலங்கள் ஒரு மொழிக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு இந்தி மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

நமக்கான நமது மொழி தாய்மொழி. உலகம் முழுவதும் பேசுவதற்கு ஆங்கிலம். ஆங்கிலம் கற்க முடியாதவர்களிடம் பேசுவதற்கு இந்தி. எனக்கு ஏன் மூன்று மொழி கொள்ளை தேவை? அடிப்படையில் அவர்களுக்கு ஒன்று, எனக்கு மூன்று. எனவே நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். தானாக முன்வந்து இந்தி பேச விரும்பும் எவருக்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உங்களுக்கு நினைவிருந்தால், சுதந்திரத்தின் போது மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்?. அவர்களின் அனைத்து மூல மொழிகளுக்கும் என்ன ஆனது? இந்தியைத் தொண்டைக்குள் தள்ளினால் அதுதான் நடக்கும். அதனால் எங்களுக்கு இந்தி வேண்டாம்.

இப்போது நீட்டைப் பொருத்தவரை நாம் நாட்டிலேயே 1000 பேருக்குத் தனிநபர் மருத்துவர்களைக் கொண்டது தமிழ்நாடு மட்டும்தான். ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள். அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள், அதிக எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் என எல்லா வகையிலும் மருத்துவத்தில் தேசிய சராசரியை விட நாங்கள் மிகவும் முன்னேறி இருக்கிறோம்.

நாங்கள் சொன்னதெல்லாம் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு 100% நிதியுதவி செய்து கொண்டிருக்கும்போது, மற்ற பாடங்களைப் போலல்லாமல் குறைந்தபட்சம் இந்த அளவிற்கு மருத்துவக் கல்வி பொதுச் சுகாதாரத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. சரியா? மருத்துவமனை இல்லாமல் மருத்துவக்கல்லூரியை நடத்த முடியாது.

உங்களுக்கு ஒரு மொழி.. எங்களுக்கு மட்டும் 3 மொழி: மும்மொழி கொள்கையின் ஆபத்தை புட்டுபுட்டு வைக்கும் PTR!

மேலும் அரசு, பொதுச் சுகாதாரத்தை வழங்கும்போது நமது மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகள், கிராமப்புறங்கள் உட்பட ஒவ்வொரு பகுதியிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மற்றும் கிராமப்புறங்களில் எவ்வளவு சேவை செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் முதுகலை திட்டங்களில் நுழைவதற்கான ஊக்கத்தொகை என்று கட்டமைத்துள்ளோம். இது முற்றிலும் பொதுச் சுகாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாநில விஷயமாகும்.

எங்கள் குழந்தைகளை எங்கள் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு எந்த தேர்வு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்? அதுதான் எங்கள் கேள்வி.

தமிழ்நாட்டை விட இந்திய அரசு வியக்கத்தக்க வகையில் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளது என்றோ அல்லது வேறு சில மாநிலங்கள் சிறப்பான முடிவுகளைத் தந்துள்ளது என்றோ நீங்கள் என்னிடம் சொன்னால் சரி, நாங்கள் அதைக் கேட்டுக்கொள்கிறோம், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம். நாங்கள் சிந்திக்கும் மனிதர்கள். முயற்சிப்போம்.

நான் நாட்டில் தலைவராக இருக்கும்போது ஐந்தாம் இடத்தில் இருக்கும் மாணவன் வந்து நான் எப்படிப் படிக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்?. எந்த அர்த்தமும் இல்லை. அதனால் தான் எதிர்க்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories