தமிழ்நாடு

“மைக் முன்னாடி வாய்ச்சவடால் பேசக்கூடாது” : தூத்துக்குடி சம்பவத்தில் அந்தர்பல்டி அடித்த சீமான் - மருதையன்!

“மைக் முன்னாடி வாய்ச்சவடால் பேசக்கூடாது” : தூத்துக்குடி சம்பவத்தில் அந்தர்பல்டி அடித்த சீமான் - மருதையன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டாம். அங்கு நினைவுச் சின்னம் வைத்தால் ஒரு நாள் வந்து நான் உடைப்பேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து சீமானின் இந்த பேச்சுக்கு தி.மு.க தொண்டர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“மைக் முன்னாடி வாய்ச்சவடால் பேசக்கூடாது” : தூத்துக்குடி சம்பவத்தில் அந்தர்பல்டி அடித்த சீமான் - மருதையன்!

மேலும் "சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா" என அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார். மேலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சீமானின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக சாடி, கண்டனங்களை பதிவு செய்தன. அந்தவகையில், சீமானின் இந்த பேச்சை கிண்டலடிக்கும் விதமாக, மக்கள் கலை இலக்கிய கழக முன்னாள் செயலாளர் எழுத்தாளர் மருதையன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சமூக வலைதளங்களில் வைரலாது.

இதுதொடர்பாக எழுத்தாளர் மருதையன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று நான் சொல்லவே இல்லை”என்று நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் முன் சீமான் பயந்து மண்டியிட்டது உண்மையா, இல்லையா? அண்ணன் பென்சிலைக்கூட உடைக்க மாட்டாரு, அவுரு பேசுறதயெல்லாம் சீரியசா எடுத்துகிட்டு…” எனத் தெரிவித்தார்.

மருதையனின் இந்தப் பதிவால் ஆடிப்போன நாம் தமிழர் தம்பிகள், அண்ணன் சீமான் அப்படி சொல்லியிருக்கமாட்டார், ஆதாரம் காட்டுங்கள் என கேட்டனர். இதனிடையே துள்ளிக்கொண்டு வந்த சீமானின் வழக்கறிஞர் மருதன் என்பவர், “சீமான் அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் சாட்சி அளிக்கும் போது வழக்கறிஞர் என்ற வகையில் தான் உடன் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீமான் அவர்கள் “நான் மக்களை போராட்டாத்திற்கு அழைத்தேன்! போராடக் கேட்டுக் கொண்டேன்! கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினேன்!” என்றுதான் ஆணையத்திடம் கூறினார். இதனை இன்றும் ஆணையத்தின் அறிக்கையில் அறியலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே எழுத்தாளர் மருதையன், “சீமான் சாட்சியம் அளிக்கையில் வழக்கறிஞரான நான் உடனிருந்தேன். "மக்களை போராட்டத்துக்கு அழைத்தேன்" என்றுதான் அவர் சாட்சியம் அளித்தார்" என கூறுகிறார். அப்போ, நீதிபதி பொய் சொல்கிறாரா?

“மைக் முன்னாடி வாய்ச்சவடால் பேசக்கூடாது” : தூத்துக்குடி சம்பவத்தில் அந்தர்பல்டி அடித்த சீமான் - மருதையன்!

சவடாலும் வசவும் மட்டுமே அரசியல் அல்ல. கொஞ்சம் உண்மையும் வேணும் தம்பிகளே!” என்றும், மற்றொரு பதிவில், "போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று என் தொண்டர்களுக்கு நான் எவ்வித வழிகாட்டுதலும் தரவில்லை என சீமான் அதிர்ச்சியூட்டும் வகையில் வாக்குமூலம் அளித்தார்"

"என் கட்சி தொண்டர்கள் பங்கேற்றது அவர்கள் சொந்த முடிவு என்றும் அவர் வலியுறுத்தினார்" இதுதான் சீமான் சாட்சியமாக பதிவாகியுள்ளது. நான்தான் போராடத் தூண்டினேன்" என்று சீமான் வாக்குமூலம் அளித்த்தாக தம்பிகள் நம்புகிறார்கள். ஆதாரத்தைக் காட்டவும். " I did not issue any instruction to my cadres to participate in the protest" என்ற வாசகத்துக்கு "நான்தான் போராடத் தூண்டினேன்" என்று பொருளா? அறிஞர்கள் விளக்கவும்.” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அரண்செய் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த எழுத்தாளர் மருதையன் பல்வேறு அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார். தூத்துகுடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் சீமான் பேசியது குறித்து உரிய ஆதாரம் இருந்தால் வெளியிடவேண்டும்.

“மைக் முன்னாடி வாய்ச்சவடால் பேசக்கூடாது” : தூத்துக்குடி சம்பவத்தில் அந்தர்பல்டி அடித்த சீமான் - மருதையன்!

நாம் தமிழர் தம்பிகள் பருலம் சீமான் அப்படி சொல்லிருக்க மாட்டார் எனக் கோவப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் சொல்லவே இல்லை; கலந்துக் கொண்டவர்கள் தூத்துக்குடி மக்கள்” எனச் சொல்லியிருக்கிறார். அவை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால் சீமான் படிக்காமல் கையெழுத்துப் போட்டுள்ளாரா? அல்லது அருணா ஜெகதீசன் ஆணையம் தவறாக எழுதிவிட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், பொது சொத்து சேதம் அடைந்த பிரச்சனையில் கட்சிகளை பொறுப்பாக்க வேண்டுமா என அனைத்து கட்சிகளையும் விசாரித்தனர். நாங்கள் உண்மை என்ன என்பதை காட்டுங்கள் எனக் கேள்வி எழுப்பினோம். ஆனால் சீமான் போல் ஒதுங்கிக்கொள்ள வில்லை.

“மைக் முன்னாடி வாய்ச்சவடால் பேசக்கூடாது” : தூத்துக்குடி சம்பவத்தில் அந்தர்பல்டி அடித்த சீமான் - மருதையன்!

இப்படி மக்கள் தானா வந்தார்கள் என்று சீமான் சொல்லிருப்பது நாம் தமிழர் தொண்டர்களுக்கு செய்த துரோகம் இல்லையா? மேடையில் தூத்துக்குடி போராட்டத்திற்கு நாங்கள் காரணம் என்று சொல்வதும் அதே, ஆணையத்திடம் சென்றால் நாங்கள் காரணம் இல்லை என்பது ஏன்?

ஆதாரம் கேட்ட உடனே நான் அளித்துள்ளேன். சீமான் இதுவரை அளிக்கவில்லை. தூக்குக்குடி போராட்டத்திற்கு பிறகு நாம் தமிழர் நீதிமன்ற தலையீடு உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரச்சனையில் தலையிட்டதா? 21ம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வருகிறது. இது சீமானுக்கு என்னானு கூட தெரியாது. மீண்டும் ஆலையை திறக்க முயற்சி நடக்கிறது. இப்படி எதுவும் தெரியாமல் மைக்கை முன்னாடி வாய்சவடால் பேசக் கூடாது. இதெல்லாம் விவரம் தெரியாத தம்பிகளிடம் வச்சுக்கனும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories