நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், 32 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கால்நடைகளுக்கு நேற்று பொங்கல் திருவிழா நடத்தப்பட்ட வந்த நிலையில், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் கோலாகலமாக சுற்றுலா பயணிகளுடன் உற்சாகமாக யானை பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதில் இருளர் பழங்குடியினர் உற்சாகமாக பாரம்பரிய இசையுடன் நடமாடி பொங்கல் விழாவை கொண்டாடினர். அப்போது மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு இருளர் பழங்குடியினர் உடன் நடனமாடி உற்சாகமாக பாரம்பரிய யானைகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக இருளர் பழங்குடியினர் நடனமாடி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை உயரதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல், கோவை மாவட்டம் கோழிகமுத்தி பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது யானை வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்படுகிறது. யானைகளுக்கு பொங்கல் வைத்து நடத்தப்படுவது பலரையும் கவர்ந்துள்ளது.