தமிழ்நாடு

நெருங்கும் கோடை.. ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை ICECREAMS, COOL DRINKS - அமைச்சர் நாசர் ருசீகர தகவல் !

கோடை காலம் விரைவில் வரவுள்ளதால் ஆவினில் புதிய வகை ஐஸ்கிரீம்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் தயாரிக்கப்படவுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேட்டியளித்துள்ளர்.

நெருங்கும் கோடை.. ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை ICECREAMS, COOL DRINKS - அமைச்சர் நாசர் ருசீகர தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வறு புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் ஆவினிலும் புதிய புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதில் அண்மையில் ஆவினில் புதிய தயாரிப்புகளான பலாப்பழம் ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், குளிர்ந்த காபி, பட்டர் சிப்லெட்கள், பாசுண்டி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பதப்படுத்தப்பட்ட சீஸ், வேகவைத்த தயிர், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

நெருங்கும் கோடை.. ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை ICECREAMS, COOL DRINKS - அமைச்சர் நாசர் ருசீகர தகவல் !

மேலும் ஆவின் சார்பாக தீப ஒளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆவினில் புதிய புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆவினில் கூல் ட்ரிங்க்ஸ், புதிய வகை ஐஸ்கிரீம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் பேட்டியளித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் பேசியதாவது, "ஆவினின் மாதாந்திர வருமானம் முன்பை விட தற்போது உயர்ந்துள்ளது. ஆவின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே ஆவினில் அடுத்ததாக கூல் டிரிங்ஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

நெருங்கும் கோடை.. ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை ICECREAMS, COOL DRINKS - அமைச்சர் நாசர் ருசீகர தகவல் !

தற்போது வரை பால் உட்பட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது. தீபாவளிக்கு வழக்கமாக இனிப்புகள் மற்றும் நெய் உற்பத்தி செய்து விற்பனை செய்வோம். வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஆவினில் கேக் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது.

தற்போது பொங்கல் பண்டிகைக்கான விற்பனையும் நல்லபடியாக உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்வது குறித்து மேலிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு கிடைத்த பின், நிச்சயம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நெருங்கும் கோடை.. ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை ICECREAMS, COOL DRINKS - அமைச்சர் நாசர் ருசீகர தகவல் !

ஆவினில் பணிபுரியும் 27,189 பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் முதமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், நிச்சயம் விரைந்து தண்ணீர் பாட்டில் விநியோகம் தொடங்கும். இன்னும் சில மாதங்களில் கோடை காலம் வரவுள்ளது. அப்போது ஐஸ் க்ரீம் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

நெருங்கும் கோடை.. ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை ICECREAMS, COOL DRINKS - அமைச்சர் நாசர் ருசீகர தகவல் !

எனவே, ஐஸ் க்ரீம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆவினில் புதிதாக கூல் டிரிங்ஸும் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான ஆய்வு பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது." என்றார்.

banner

Related Stories

Related Stories