தமிழ்நாடு

ஆளுநரின் அலட்சியத்தால் தொடரும் மரணம்: ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தற்கொலை!

நெல்லை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 15ம் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் அலட்சியத்தால் தொடரும் மரணம்:  ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் ராஜ். இவர் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும் இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த விளையாட்டில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ. 15 லட்சம் வரை இழந்துள்ளார். மேலும் இவரது தந்தை பாஸ்கரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஆளுநரின் அலட்சியத்தால் தொடரும் மரணம்:  ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தற்கொலை!

இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தப்பா மகனின் மனைவி நகைகளை அடகுவைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் ரூ.1 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். மேலும் உறவினரின் நகைகை அடகுவைத்துத் தோற்றுவிட்டோ எப்படி அதை மீட்பது என்று தெரியாமல் கவலையடைந்து விரக்தியில் இருந்துள்ளார்.

இதையடுத்து நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுநரின் அலட்சியத்தால் தொடரும் மரணம்:  ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தற்கொலை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் விதமாக தி.மு.க அரசு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை நிறை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருவதால் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் மரணங்கள் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories