தமிழ்நாடு

இதுதான் உங்கள் தேசப்பற்றா?.. "தேசிய கீதம்" பாடுவதற்கு முன்பே வெளியேறிய ஆளுநர்- வலுக்கும் எதிர்ப்புகள்!

"தேசிய கீதம்" பாடுவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறியது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் உங்கள் தேசப்பற்றா?.. "தேசிய கீதம்"  பாடுவதற்கு முன்பே  வெளியேறிய ஆளுநர்- வலுக்கும் எதிர்ப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு 67 அம்சங்களை கொண்ட 48 பக்கம் அடங்கிய ஆளுநருக்கான உரையை தயார் செய்து வழங்கியிருந்தது.

இந்த உரையில் இருக்கும் சில வார்த்தைகளை ஆளுநர் வேண்டும் என்றே தவிர்த்து வாசித்தது தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் வாசிப்பதற்காக தமிழ்நாடு அரசு வழங்கிய அந்த 65வது அம்சமாக இடம் பெற்று இருந்த "சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

இதுதான் உங்கள் தேசப்பற்றா?.. "தேசிய கீதம்"  பாடுவதற்கு முன்பே  வெளியேறிய ஆளுநர்- வலுக்கும் எதிர்ப்புகள்!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அரசு வழங்கி வருகின்றது" என இருந்த பத்தியை ஆளுநர் வாசிக்காமல் வேண்டும் என்றே தவிர்த்தார்.

ஆளுநரின் இந்த சட்டப்பேரவை மரபு மீறல் நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கன்னடம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளுநரின் உரைக்குப் பிறகு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதுதான் உங்கள் தேசப்பற்றா?.. "தேசிய கீதம்"  பாடுவதற்கு முன்பே  வெளியேறிய ஆளுநர்- வலுக்கும் எதிர்ப்புகள்!

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை முடிவதற்கு முன்பே அதுவும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே தன்னுடைய இருக்கையில் இருந்த எழுந்து அவையை விட்டு வெளியே சென்றது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது இதுதான் உங்கள் தேசப்பற்றா என தமிழ்நாட்டு மக்களும் கேள்வி எழுப்பி ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக எதிர்க்கட்சிகளே இது போன்று கொள்கை சார்ந்து வெளிநடப்பு செய்யும் நிலையில், சுதந்திரம் அடைந்து 70 வருட சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் ஒருவர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேசிய கீதத்தையும் ஆளுநர் புறக்கணித்துள்ளது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories