தமிழ்நாடு

அம்பேத்கர் முதல் அண்ணா வரை.. சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்த்த 5 முக்கிய பெயர்கள்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு!

அம்பேத்கர் முதல் அண்ணா வரை.. சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்த்த 5 முக்கிய பெயர்கள்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.

குறிப்பாக அண்மையில் கூட தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா உள்ளிட்ட மாநில அரசு கொண்டு வந்த 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி இருந்து வருகிறார். மேலும் ஒரு ஆளுநர் போல் நடந்து கொள்ளாமல் தனது சனாதன கருத்துக்களையும் பொதுவெளியில் பேசி வருகிறார்.

அம்பேத்கர் முதல் அண்ணா வரை.. சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்த்த 5 முக்கிய பெயர்கள்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு!

அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் போன்று நடந்து கொண்டும் வருகிறார். இப்படி ஆளுநரின் ஒவ்வொரு செயல்களிலும் தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிகழ்வுகள் இருக்கிறது. திருவள்ளுவரை இந்து என கூறுவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வளவு ஏன், அண்மையில் கூட ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பேசுகையில், "தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதே சரியானது" என்றார். இவரின் இந்த பேச்சுக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. அதோடு இணையவாசிகள், தமிழ் ஆர்வலர்களும் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

அம்பேத்கர் முதல் அண்ணா வரை.. சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்த்த 5 முக்கிய பெயர்கள்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு!

தொடர்ந்து இணையத்திலும் இந்திய அளவில் #தமிழ்நாடு என்று தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆளுநருக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடே இருக்கும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது செயல்களால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நடப்பாண்டின் (2023) முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.

தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க..” என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முழக்கம் எழுப்பியபோதும், ஆளுநர் தனது உரையை பேசிக்கொண்டே இருந்தார்.

அம்பேத்கர் முதல் அண்ணா வரை.. சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்த்த 5 முக்கிய பெயர்கள்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு!

இருப்பினும் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பிய அக்கட்சியினர், பின்னர் வெளிநடப்பு செய்ய எண்ணினர். அதன்படி அதிமுகவை தவிர காங்கிரஸ், மதிமுக, விசிக, த.வா.க., உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து ஆளுநர் பேசி வந்தார். அப்போது அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் இருந்து முக்கிய 5 தலைவர்களின் பெயர்களை தவிர்த்தே பேசினார். அதாவது

"தந்தை பெரியார்,

அண்ணல் அம்பேத்கர்,

பெருந்தலைவர் காமராசர்,

பேரறிஞர் அண்ணா,

முத்தமிழறிஞர் கலைஞர்" - ஆகிய 5 பெயர்களை ஆளுநர் தனது உரையில் இருந்து நீக்கி பேசியுள்ளார்.

அம்பேத்கர் முதல் அண்ணா வரை.. சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்த்த 5 முக்கிய பெயர்கள்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு!

ஆளுநரின் இந்த முகசுழிக்கும்படியான நடவடிக்கையை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அவை மரியாதை இல்லாமல் ஒரு எதிர்க்கட்சி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதனால் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் முதல் அண்ணா வரை.. சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்த்த 5 முக்கிய பெயர்கள்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு!

ஆளுநர் தவிர்த்த அந்த முக்கிய 5 தலைவர்களும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் பாடுபட்டனர். இருப்பினும் அவர்களது பெயரை வேண்டுமென்றே தவிர்த்து பேசிய ஆளுநருக்கு திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories