தமிழ்நாடு

விளையாட்டின் போது ஓய்வெடுக்க சென்ற தமிழக வீரர் மரணம்.. வாலிபாலுடன் நல்லடக்கம் செய்த நண்பர்கள் !

வீரர் ஆகாஷ் உடலை, சக வாலிபால் வீரர்கள் சுமந்து வந்து, வாலிபாலுடன் நல்லடக்கம் செய்தனர்.

விளையாட்டின் போது ஓய்வெடுக்க சென்ற தமிழக வீரர் மரணம்.. வாலிபாலுடன் நல்லடக்கம் செய்த நண்பர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நேபாள நாட்டின் போக்ரா நகரத்தின் ரங்கசாலா பகுதியில் தனியார் மூலம் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டு பேட்டியில் கடந்த 21 ந் தேதி ஈரோடு மாவட்டம் தனியார் யூ.எஸ்.ஏ கிளப்பின் உரிமையாளர் நாகராஜ் தலைமையில் 20 பேர் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தனர்.

அந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் (27)என்பவர் நேபாள அணிக்கும் கிளாப் அணிக்கும் நடந்த போட்டியில் பங்கேற்று முதல் சுற்று விளையாடியுள்ளார்.

முதல் சுற்று முடிந்து ஓய்வெடுக்க சென்று இருந்த அவர் திடீரென இரண்டு முறை வாந்தி எடுத்ததாகவும் .அதன் பின் அவர் உடன் நண்பர்கள் விளையாட்டு பயிற்சி தலைவர் நாகராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .

விளையாட்டின் போது ஓய்வெடுக்க சென்ற தமிழக வீரர் மரணம்.. வாலிபாலுடன் நல்லடக்கம் செய்த நண்பர்கள் !

ஆனால் வரும் வழியிலே ஆகாஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உடலை பரிசோதித்த பின் தெரிவித்துள்ளனர். இறந்த ஆகாஷின் உடலை தமிழகம் கொண்டுவர அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் அவரது உடல் விமானம் மூலம் தமிழகம் வந்தது.

இந்நிலையில் அவரது உடலுக்கு திருவள்ளூர் அடுத்த கைவண்டூருக்கு ஆகாஷின் உடல் கொண்டு செல்லபட்டு அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆகாஷின் உடலுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ,அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப்சாமுவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் உடலை அடக்கம் செய்யும் போது வீரர் ஆகாஷ் உடலை, சக வாலிபால் வீரர்கள் சுமந்து வந்து, வாலிபாலுடன் நல்லடக்கம் செய்தனர்!

banner

Related Stories

Related Stories