தமிழ்நாடு

“எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி!

விளையாட்டு நலத்துறைகளின் சார்பில் உங்கள் தொகுதியில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம் " என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

“எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்”:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் இன்று (25.12.2022) நடைபெற்ற அரசு விழாவில் ரூ.229.83 கோடி மதிப்பிலான 1115 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.790.41 கோடி மதிப்பீட்டிலான 5936 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25,042 பயனாளிகளுக்கு, ரூ.368.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இவ்விழாவில் 25,042 பயனாளிகளுக்கு, ரூ.368.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

“எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்”:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி!

மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து, பொதுமக்களிடருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்களின் விவரங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும், இதுவரை 157575 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 10ஆண்டு காலங்களில் 2.20 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் 1.50 இலட்சம் விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின் இணைப்பு வழங்கி சாதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மிககுறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்த மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், அரசுத்துறை அலுவலர்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்”:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி!

தற்போது இன்று நடைபெற்ற இந்த அரசு விழாவில் ரூ.229.83 கோடி செலவில் 1115 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.790.41 கோடி மதிப்பீட்டிலான 5936 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25,042 பயனாளிகளுக்கு, ரூ.368.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

எனமொத்தம் மூன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மூலமாக ரூ.1089 கோடி செலவில் 1413 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.1540 கோடி மதப்பீட்டிலான 6800 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் 1,60,000 பயனாளிகளுக்கு, ரூ.1600 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாட்டிலே அதிக அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற முதல் மாவட்டமாக கோயம்புத்தூர் மாவட்டம் விளங்கி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் சாதனைகள் சில ,

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சுமார் 1,70,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 1,63,000 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 1200 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மகளிர் திட்டத்தின் மூலம் 2,452 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ரூ.63 கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13,885 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.62. கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த சுமார் 510 பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

“எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்”:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி!

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குட்பட்ட நகைக்கடன் ரத்துத்திட்டத்தின் மூலம் சுமார் 42,000 நபர்களுக்கு ரூ.200 கோடி தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். பல்வேறு கடன் உதவித்திட்டத்தின் கீழ் 3,48,000 நபர்களுக்கு ரூ.3300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சாலைபணிகளுக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாநகரத்திற்கு மேற்கு சுற்று வட்டச்சாலை அமைக்க நில எடுப்புக்காக ரூ.104.44 கோடி இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.1084 கோடி இழப்பீட்டுத்தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 10,30,296 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் கொரோனா நிவாரணமாக ரூ.412.07 கோடி வழங்கப்பட்டுள்ளன.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 27,76,436 பயனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 1,75,898 நபர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய தொற்றா நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இலவச மின்சார திட்டத்தின் கீழ் 11866 விவசாயிகளுக்கு ரூ.38.9 கோடி மதிப்பீட்டில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.13.58 இலட்சம் மதிப்பீட்டில் 60 விசைத்தறி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

“எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம்”:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி!

மேலும், இன்றைய தினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.6.55கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும் ரூ.65.15இலட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற 6 மாதங்களில் இந்தியாவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என்று அறிவித்தது. இதற்கு நம் முதலமைச்சர் அவர்களிடம் கருத்து கேட்டபோது இந்தியாவில் நம்பர் 1 முதலமைச்சர் என்று கூறுவது எனக்கு பெருமையல்ல, இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக நம்ம மாநிலம் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு என்று கூறினார்.

இந்தியாடூடே நாளிதழ் வெளியிட்டுள்ள சர்வேயில் இந்தியாவிலே தமிழ்நாடு மாநிலம் நம்பர் 1 மாநிலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. விளையாட்டு நலத்துறைகளின் சார்பில் உங்கள் தொகுதியில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம். அக்கோரிக்கைகள் மீது தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories