தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற நாளில் முதலேயே பா.ஜ.கவில் பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடிகளை கட்சியில் சேர்பதையே தனது முதற்பணியாக மேற்கொண்டு வந்தார்.
ஆரம்பத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடிகளுக்கு கமலாலயம் அடைக்கலம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவையெல்லாம் உண்மை என நிரூபிக்கும் வகையில், சமீப கால பா.ஜ.கவினர் நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சொந்தக்கட்சியில் உள்ள பெண்களையே ஆபாசமாக பேசுவது, பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பது என பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய பாஜக நிருவாகி ஒருவருக்கும் பேருந்தில் இருந்த போலிஸார் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
அதோடு சட்டையை கழட்டி வைத்து விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா பாக்கலாம் என்றும் கூறி போலீஸாரை மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளிகி வைரலானது. இதனை பார்த்த பொதுமக்கள் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது, திருவள்ளூர் அருகே மதுபான பாரில் சைடிஸ் வாங்கியதற்கு பணம் கேட்ட மதுபான ஊழியரை திருவள்ளூர் நகர பாஜக இளைஞர் தலைவர் தயா.கார்த்திகேயன் தாக்கும் சி சி.டிவி வீடியோ வைரலாகியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள மதுபான பாரில் கடந்த 3ந் தேதி அன்று திருவள்ளூர் நகர பா.ஜ.க இளைஞரணி தலைவர் உதயா.கார்த்திகேயன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் மதுபான பாரில் 160 ரூபாய் மதிப்பிலான சிக்கன் ஈரல் சைடிஸ் வாங்கி மது அருந்திவிட்டு பின்னர் பணத்தை தராமல் சென்றுள்ளனர்.
அதைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணி அளவில் மதுபான பார் வெளியே மது வாங்கிக் கொண்டிருந்த பா.ஜ.க நகர தலைவர் உதயா. கார்த்திகேயனை பார்த்து மதுபான பார் ஊழியர் பிரசாத் (31 ) அவர்களிடம் பணம் கேட்டபோது, தன்னிடமே பணம் கேட்பாயா நான் பாஜக நிர்வாகி என்று கூறி அவரிடம் தகாத வார்த்தையில் திட்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்வரை சரமாரியாக கன்னத்தில் அறைந்து அங்கிருந்து வாகனத்தில் கொலை மிரட்டல் விடுத்து தப்பியுள்ளார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சி வீடியோ வைரலாகி உள்ளது. இதனையடுத்து போலிஸாரிடம் இதுகுறித்து புகாரளிக்க பார் ஊழியர்கள் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரையில் பார் ஊழியரைத் தாக்கிய உதயா. கார்த்திகேயன் கைது செய்யப்பட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.