தி.மு.க தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் ஏறியதில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்க பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை - எளிய மக்களுக்கு சேர்வேண்டிய திட்டங்கள், நிவாரணம் உதவி முறையாக செய்யப்படுகிதா என்பதை நேரடியாக கண்காணித்து வருகிறார். அதுமட்டுமல்லாது முதலமைச்சர் உதவி மையத்திற்கு வரும் மனுக்களும் பரிசிலினைக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருபக்கம் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தால், மறுபக்கம் கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை திமுகவினர் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மக்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவி, மருத்துவ முகாம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, கழக நிர்வாகிகள் செய்துவரும் உதவி சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானதை பார்க்க முடியும். அந்தவகையில் சமீபத்தில் கூட படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் சுங்கச்சாவடியில் முந்திரி வியாபாரம் செய்து வந்த மாணவியின் கல்வி படிப்பை மீண்டும் தொடர் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் உதவி செய்து நிகழ்வு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டை குவித்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது தி.மு.க எம்.எல்.ஏ செய்த மருத்துவ உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். கடந்த 30.11.2022 அன்று ஜூவி இதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண், உடல் மற்றும் மனநிலை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட தனது 19 வயது மகன் சரண் சங்கீத்துடன் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த பெண்ணின் நிலைமையை அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி மகனுக்கு மருத்துவக் காப்பீடு அட்டையை வழங்க உத்தரவிட்டார். மேலும் தொலைபேசியில் வளர்மதியிடம் பேசி அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை அளித்தார்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சரணுக்கு 3 கட்டங்களாக சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். கண் பார்வை திரும்புவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் கண்ணில் வடியும் ரத்ததை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் வலிப்பு நோய் வராமலிருக்கவும், குணப்படுத்தவும் மருத்து கொடுக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் முடிந்த பின்னர் தொடர்ந்து மனநல சிகிச்சை அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனை நேரில் வந்து பார்வையிட்ட அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமார் நலம்விசாரித்தார்.
மேலும் சிறுவனின் தாயார் தங்களுக்கு வீடு இல்லை எனக் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ நந்தகுமார், ”என் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு சார்பில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது. அதில் ஆட்சி தலைவரிடம் பேசி அதில் ஒரு வீடு ஒதுக்கும் படி பேசி வீடுப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதுமட்டுமல்லாது மாதம்தோறும் அந்த குடும்பத்துக்கு தேவையான மளிகைப்பொருட்களை கொடுக்கப்படும் என்றும் மருத்துவமனை வந்துச் செல்ல போக்குவரத்து உதவியும் செய்துதரப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ நந்தகுமாரின் இந்தகைய நம்பிக்கை வாக்குறுதியை கண்டு நெகிழ்ந்த சிறுவனின் தயார் வளர்மதி இதுகுறித்து கூறுகையில், “இதுபோன்று நடக்கும் என கனவிலும் கூட நினைக்கவில்லை. என்னுடைய மகனை எப்படி குணப்படுத்தபோகிறேன் என்ற கவலை நெடுநாளாக இருந்தது. அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர். மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.