தமிழ்நாடு

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.. அரசு கேபில் TV-யில் FIFA உலகக் கோப்பையை இலவசமாக கண்டுகளிக்கலாம்!

FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.. அரசு கேபில் TV-யில் FIFA உலகக் கோப்பையை  இலவசமாக கண்டுகளிக்கலாம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரை நோக்கியே இருக்கிறது.

தினமும் 4 போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் மதியத்தில் இருந்தே போட்டிகள் தொடங்கி விடுகிறது. இந்தியாவில் Viacom 18 நிறுவனத்தின் SPORTS 18 சேனலில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் ஓ.டி.டி-யில் jiocinema ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.. அரசு கேபில் TV-யில் FIFA உலகக் கோப்பையை  இலவசமாக கண்டுகளிக்கலாம்!

இந்த தொடரில் கத்துக்குட்டி அணிகளுடன் ஜாப்பான் அணிகள் அடுத்தடுத்து முதல் லீக் போட்டியிலேயே தோற்றுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அர்ஜென்டினா அணி 1-2 என்ற கணக்கில் சவூதி அரேபியா அணியுடன் தோல்வியடைந்தது.

அதேபோல் 4 முறை உலகக் கோப்பை வாங்கிய ஜெர்மனி ஜப்பான் அணியுடன் படுதோல்வி அடைந்தது. இப்படி அடுத்தடுத்து ஜப்பான் அணிகளே தோல்வியடைந்துள்ளதால் கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories