தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக திராவிட பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் ஒருபகுதியாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில், இளைஞர் அணி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணியினரும் இறையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் திருண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் கொளத்தூர் மணி பேசுகையில், “கி.பி 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பிராமினர்கள் ஆதிகத்தில் இருந்த மக்கள் சாதாரண மக்களுக்கு கல்வி மற்றும் சம உரிமைக்காக போராடிய இயக்கம் திராவிட இயக்கம்.
அடித்தட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும் கிடைக்கப் போராடிய இயக்கம் திராவிட இயக்கம்” என பேசினார். இதரைத் தொடர்ந்து மாநில சுயாட்சி என்ற தலைப்பில் மாநில திட்ட துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் பேசுகையில், “இந்தியாவில் பழமொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தங்களுக்கென சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் என இரண்டாகப் பிரித்து மாநிலங்களுக்குள் சட்டமன்றங்களை உருவாக்கியும், இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.
தனக்கான தேவைகளை உரிமைகளையும் பிரதிநிதிகள் மூலம் அரசிடம் இருந்து பெற்று தருவது மாநில சுயாட்சி ஆகும். தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் ஒவ்வொன்றாக அறிந்து திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” எனத் தெரிவித்துள்ளார்.