தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறையானது செய்து வருகிறது. இந்தியா முழுவதும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னுக்குச் சென்றுகொண்டிருப்பதை ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மழலையர் பள்ளி வகுப்புகள் இல்லாமலேயே 5 அல்லது 6 வயதில் பள்ளியில் சேரும் வாய்ப்பு தமிழகத்தில் உள்ள மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இலவச கல்வி, மதிய உணவு, இலவசப் புத்தகம், இலவசச் சீருடை, இலவச மிதிவண்டி, இலவசக் காலணி, இலவச லேப்டாப், கல்வி உதவித் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடைநிற்றல் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள சமச்சீர் கல்வி மூலம் சர்வதேச அளவில் பல வெற்றிகளை மாணவர்கள் காண முடிகிறது. அவர்களது அறிவு, திறமை உள்ளிட்டவற்றை மேம்படுத்திக் கொள்ளவும் முடிகிறது.
இத்தகைய சூழலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமுடன் உருவாக்கி வருகிறார். மாணவர்களி கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு காட்டும் தனி கவனம் உலகளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் தடம் பதிக்க விதையாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மேலும் பள்ளி - கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொள்வது ஒருபக்கம் இருந்தால், படிக்க வராமல் இடையில் நின்று விடக் கூடியவர்களையும் பள்ளி – கல்லூரிகளுக்குள் அழைத்து வரும் நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.
அனைவர்க்கும் கல்வி என்பதே திராவிட மாடல் இலக்கு என கல்வி நிறுவனங்களில் நடக்கும் நிகழ்ச்சியில் சொல்லி வரும் முதல்வர் அதற்கு ஏற்றார்போல், னைவர்க்கும் கல்வி - அனைவர்க்கும் உயர் கல்வி - அனைவர்க்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதை இலக்காகக் கொண்டு பள்ளிக் கல்வித் துறையும் உயர் கல்வித் துறையும் செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் முதலமைச்சரின் முக்கிய திட்டங்களான ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ முதல் ‘நான் முதல்வன்’ திட்டம் என அனைத்துமே தமிழ்நாட்டு மாணவ - இளைஞர்களின் முன்னேற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீட்டப்படும் திட்டங்கள் ஆகும்.
இதில் ஒருபகுதியாக, ‘’பள்ளிக்கு வந்தவர்களைப் படிக்க வைப்பது மட்டுமல்ல; பள்ளிக்கு வர இயலாதவர்களையும் வர வைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு முதலமைச்சர் உருவாக்கிய திட்டம் தான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லாதவர்களுக்கான சிறப்பு முகாம்கள். அத்தகைய முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் தினம் நடந்துள்ளன.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நிடைநிற்றல் குழு மூலம் படிப்பை தொடரமுடியாமல் வேலைக்குச் செல்லும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் உயர்கல்விக்கு அவர்களை அழைத்துச் செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்னவே ஆயிரக்கணக்கான இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வி கற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மேலும் இடைநிற்றல் மூலம் கல்லூரி வாய்ப்பை தொடரமுடியாத 777 மாணவர்களை இடைநிற்றல் குழு கண்டறிந்துள்ளது. அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த காரணங்கள் கேட்டப்போது குடும்பநிதிநிலை, பாடப்பிரிவு கிடைக்காதது போன்ற காரணங்களை தெரிவித்துள்ளனர். எனவே அவற்றை களைந்து மாணவர்களை கல்லூரியில் சேர்க்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.