தமிழ்நாடு

பார்வையற்ற காதலர்களுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைத்த போலிஸ்: மனதை வருடும் நெகிழ்ச்சி சம்பவம்!

பார்வையற்ற காதலர்களுக்கு சீர்வரிசையுடன் போலிஸார் திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

பார்வையற்ற காதலர்களுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைத்த போலிஸ்: மனதை வருடும் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவருக்கு பிறக்கும் போதில் இருந்தே கண்கள் தெரியவில்லை. அவரது பெற்றோர்கள் பல மருத்துவனைக்குசென்று பார்த்தும் அவருக்கு கண்பார்வை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால், கண்பார்வை ஒரு பிரச்சனையாகப் பார்க்காத பாலு கல்லூரி வரை படித்து எம்.ஏ, பி.எட் பட்டம் வாங்கியுள்ளார். அவரது பெற்றோர்கள் கூலி தொழில் செய்துவந்தாலும் பாலுவிற்காக அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளனர்.

பார்வையற்ற காதலர்களுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைத்த போலிஸ்: மனதை வருடும் நெகிழ்ச்சி சம்பவம்!

இந்நிலையில் கல்லூரியில் படுக்கும் போது கம்ப்யூட்டர் பயிற்சிக்குச் சென்றுள்ளார். அப்போது தமிழரசி என்ற பெண்ணை பார்த்து நட்பாகப் பழகியுள்ளார் பாலு. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. தமிழரசியும் பார்வை குறைபாடுகள் உடையவரே.

இதற்கிடையில் பாலுவிற்கு கல்லூரி படுக்கும் போது மதுரவாயலில் காவல்துறை ஆய்வாளராக இருந்த ஆனந்த் பாபு அறிமுகம் கிடைத்துள்ளது. இவர் தான் பாலு மேற்படிப்பிற்குப் பணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து ஒரு சகோதானை போல அவரை பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

பார்வையற்ற காதலர்களுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைத்த போலிஸ்: மனதை வருடும் நெகிழ்ச்சி சம்பவம்!

இதையடுத்து ஆனந்த் பாபுவிடம் தமிழரசி மீதான காதல் குறித்து பாலு தெரிவித்துள்ளார். மேலும் தங்களது திருமணத்திற்குப் பணம் பிரச்சனை குறித்தும் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆனந்த் பாபு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அதன்படியே லயன்ஸ் கிளப், காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் பாபு ஆகியோரின் உதவியுடன் பாலு - தமிழரசியின் திருமணம் வடபழனி கோவிலில் நவம்பர் 7ம் நடந்துள்ளது. மேலும் ஆனந்த் பாபு. மேலும் தம்பதிகளுக்குப் பரிசாக ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார். இந்த பார்வையற்ற காதல் ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்த போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories