தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் காணாமல் போன வட மாநில பெண்ணின் கை குழந்தை.. 5 மணி நேரத்தில் மீட்ட தமிழக போலிஸ் !

பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த வடமாநில பெண்ணின் 6 மாத பெண் குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்த 5 மணி நேரத்தில் ஓசூர் காவல்துறையினர் மீட்டனர்.

பேருந்து நிலையத்தில் காணாமல் போன வட மாநில பெண்ணின் கை குழந்தை.. 5 மணி நேரத்தில் மீட்ட தமிழக போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த வடமாநில பெண்ணின் 6 மாத பெண் குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்த 5 மணி நேரத்தில் ஓசூர் காவல்துறையினர் மீட்டனர்.

உத்திர பிரேதச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் ராம்கேவர் (வயது 27). ஓசூர் அருகே மகாதேவபுரம் என்னும் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவர், தனது மனைவி, ஒரு ஆண் குழந்தை மற்றும் 6 மாத கை குழந்தையோடு நேற்று வாரணாசியில் இருந்து ஓசூர் வந்துள்ளார்.

பேருந்து நிலையத்தில் காணாமல் போன வட மாநில பெண்ணின் கை குழந்தை.. 5 மணி நேரத்தில் மீட்ட தமிழக போலிஸ் !

அப்போது இரவு நேரம் என்பதால் பேருந்து இருக்காது என்ற நிலையில், ஓசூர் பேருந்து நிலையத்தில் கை குழந்தையோடு தூங்கியுள்ளனர். தூங்கி அதிகாலை எழுந்து பார்க்கையில் அருகில் படுக்க வைத்திருந்த 6 மாத கை குழந்தையை காணவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பதறிப்போன பெற்றோர், தனது குழந்தையை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான குழு சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

பேருந்து நிலையத்தில் காணாமல் போன வட மாநில பெண்ணின் கை குழந்தை.. 5 மணி நேரத்தில் மீட்ட தமிழக போலிஸ் !

அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பவர், கை குழந்தையுடன் ஒரு பெண் அங்கே இங்கே உலாத்தி கொண்டிருந்ததாகவும், அவர் தன்னிடம் கூட 20 ரூபாய் கேட்டதாகவும் தெரிவித்தார். ராஜா கொடுத்த அங்கு அடையாளங்களின் பேரில் அருகே தேடி பார்த்த காவல்துறையினர், ஒசூர், இராயக்கோட்டை சாலையில் குழந்தையுடன் சென்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

பேருந்து நிலையத்தில் காணாமல் போன வட மாநில பெண்ணின் கை குழந்தை.. 5 மணி நேரத்தில் மீட்ட தமிழக போலிஸ் !

அப்போது அவர் அந்த குழந்தையை தூக்கி சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெங்களூரைச் சேர்ந்த இராஜேஸ்வரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்த 6 மாத பெண் குழந்தையை மீட்ட அதிகாரிகள், குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

வடமாநில பெண்ணின் குழந்தை காணாமல் போன 5 மணி நேரத்திற்குள்ளே குழந்தையை மீட்டு அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ள காவல்துறையினரின் செயல் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. குழந்தையை தூக்கி சென்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories