தமிழ்நாடு

மதுரை To சென்னை - அதிவிரைவில் சென்று சாதனை படைத்த வைகை எக்ஸ்பிரஸ் ! பழைய சாதனை தகர்ப்பு !

மதுரை இரயிலான வைகை எக்ஸ்பிரஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தங்களது இலக்கை சுமார் 46 நிமிடங்களுக்கு முன்பாக சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.

மதுரை To சென்னை - அதிவிரைவில் சென்று சாதனை படைத்த  வைகை எக்ஸ்பிரஸ் ! பழைய சாதனை தகர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும் போக்குவரத்தில் ஒன்று தான் இரயில். இரயிலில் பயணித்தால் எந்த வித தடையும் இன்றி, குறித்த நேரத்தில் பயணிக்க முடியும் என்று பயணிகள் நம்புகின்றனர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் 15 இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் 'வைகை எக்ஸ்பிரஸ்'. கடந்த 1977 ஆண்டு அறிமுகம்படுத்தப்பட்ட இரயில் தான் 'வைகை எக்ஸ்பிரஸ்'.

மதுரை To சென்னை - அதிவிரைவில் சென்று சாதனை படைத்த  வைகை எக்ஸ்பிரஸ் ! பழைய சாதனை தகர்ப்பு !

இது தற்போது தினமும் மதுரையிலிருந்து காலை 7.10-க்கு புறப்பட்டு பகல் 2.30 மணிக்கு சென்னைக்கு வந்தடைகிறது. அதே போல் சென்னையிலிருந்து பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15-க்கு மதுரை சென்றடையும்.

இந்த நிலையில், சுமார் 7 மணி 20 நிமிடங்கள் பயணிக்கும் இந்த இரயிலின் பயண நேரத்தை குறைத்து தற்போது வெறும் 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்று சாதனை படைத்துள்ளது. அதாவது சுமார் 46 நிமிடங்களுக்கு முன்பாகவே தனது இலக்கிற்கு சென்று சாதனை செய்துள்ளது.

மதுரை To சென்னை - அதிவிரைவில் சென்று சாதனை படைத்த  வைகை எக்ஸ்பிரஸ் ! பழைய சாதனை தகர்ப்பு !

கடந்த அக்.15ம் தேதி மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை ரயில், தவிர்க்க முடியாத காரணங்களால் 30 நிமிடங்கள் காலதாமதமாக 7.40க்கு புறப்பட்டது.இருப்பினும், சென்னைக்கு மதியம் 2.14 மணிக்கு சென்றடைந்து விட்டது. அவ்வகையில் மதுரை - சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை 11 நிறுத்தங்களுடன் 6 மணி 34 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories