தமிழ்நாடு

சசிகலாவே எல்லாத்துக்கும் காரணம்.. ஜெயலலிதா மரணம் குறித்து உண்மையை புட்டு புட்டு வைத்த ஆறுமுகசாமி ஆணையம் !

ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவே எல்லாத்துக்கும் காரணம்.. ஜெயலலிதா மரணம் குறித்து உண்மையை புட்டு புட்டு வைத்த ஆறுமுகசாமி ஆணையம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது. பின்னர் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

சசிகலாவே எல்லாத்துக்கும் காரணம்.. ஜெயலலிதா மரணம் குறித்து உண்மையை புட்டு புட்டு வைத்த ஆறுமுகசாமி ஆணையம் !

22.09.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் என சாட்சியங்கள் கூறியுள்ளன. ஆனால் 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இப்படி ஜெயலலிதா இறப்பில் முரண்பட்ட விவரங்கள் உள்ளது.

சசிகலா மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த பிறகு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சமூக உறவு இல்லை. 2011 நவம்பரில் சசிகலா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் பின்னர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவின் மறு வருகைக்குப் பிறகு இருவருக்கும் இடையே முன்பு இருந்த நல்லுறவு சமூகமாக இல்லை.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தகவல்கள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை.

சசிகலாவே எல்லாத்துக்கும் காரணம்.. ஜெயலலிதா மரணம் குறித்து உண்மையை புட்டு புட்டு வைத்த ஆறுமுகசாமி ஆணையம் !

டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை. போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன.

இதை எல்லாம் வைத்து பார்க்கையில் சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் சசிகலா அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது எண்மை. ஆனால் அதன் பிறகு நடந்த அனைத்தும் சசிகலாவால் ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசன், நாள்பட்ட வயிற்றுபோக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டருந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு 3 நாட்கள் அதிக காய்ச்சலில் ஜெயலலிதா இருந்தால் அப்போது டாக்டர் சிவகுமாரின் ஆலோசனை படி மருந்துகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

சசிகலாவே எல்லாத்துக்கும் காரணம்.. ஜெயலலிதா மரணம் குறித்து உண்மையை புட்டு புட்டு வைத்த ஆறுமுகசாமி ஆணையம் !

மருத்துவனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும் செய்தியாளர் சந்திப்பில் எந்த ரேந்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாகஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது என ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories