தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியை பல்வேறு உலக நாட்டின் பிரபல நாளேடுகள் பாராட்டி செய்தி வெளியிட்டு வருகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத பல மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக அத்தகைய ஊடங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, பெண்களின் கல்வியை முன்னேற்றும் வகையில், அரசுப்பள்ளியில் படித்து, கல்லூரி படிக்கச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை, குடும்ப தலைவிக்கு உதவித்தொகை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் என பல முற்போக்கு திட்டங்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆட்சிக்கு வந்தநாள் முதல் எந்தவொரு சிறு குறையும் வந்துவிடக்கூடாது, மக்களுக்கு இடையூறு இல்லாமல் அனைத்து பணிகளையும் முடிக்கவேண்டும், அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு கண்காணித்து வருகிறார்.
இந்தசூழலில் சில இடங்களில் சில அதிகாரிகளின் கவனக்குறைவால் நடக்கும் சில பிரச்சனைகளை பா.ஜ.க - அ.தி.மு.க கும்பல் மற்றும் பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் சில ஊதி பெரிதாகும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் குடிநீர் குழாய் மற்றும் இருசக்கர வாகனத்துடன் சாலை அமைத்த விவகாரத்தை பா.ஜ.க கும்பல்கள் மற்றும் சில ஊடகங்கள் கட்டம் கட்டி பூதாகரமாக்கியது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சாலை முறையாக அமைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்லாத தகவலை, சொல்லியதாக கூறி போலி செய்தியை பரப்பிய ஊடகங்கள் அவர் சொன்ன மறுப்பு செய்தியை வெளியிட தவறியது.
இந்நிலையில் தற்போது தலைநகர் சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியை அரசு வேண்டுமென்றே தமதாக செய்வது போலவும், பணிகளை அறைவேகாட்டு பணிகள் என விமர்ச்சித்து சிறப்பு செய்திகள் வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் முறையான வடிகால் வசதி செய்ததால் அரங்கேறிய அவலங்களை பார்த்தோம்.
குறிப்பாக மழைநீர் செல்வதற்கு வழியில்லாம் தெருக்களிலும் வீடுகளிலும் புகுந்தது. அத்தகைய நிலைமையை மாற்றும் வகையில் தொடர்ச்சியாக வாய்கால் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணியை அரசு முணைப்புடம் செய்து வருகிறது. ஆனால் சில ஊடங்கள் கடந்த காலங்களில் செயல்படுத்தாத பணிகளை சுட்டிக்காட்டாமல், அரசின் தற்போது பணிகள் காலதாமதமாகுவதாக குற்றஞ்சாட்டி செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திராவிடவியல் கோட்பாடுகள் - திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கும் “உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரின் முதல் பாகம் இன்று (16-10-2022) காலை ஒளிபரப்பானது.
அதில், தமிழ்நாடு முழுவதும் சாலைகள் எப்போது சரி செய்யப்படும்? மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் அனைத்தும் முழுமையாக எப்போது முடியும்? என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் பின்வருமாறு :-
பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியில எதுவும் செய்யப்படவில்லை. அதுனால்தான் இந்த நிலைமை காணப்படுகிறது. 2021 மே மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா இரண்டாவது அலையை நாம் எதிர்கொண்டோம். இரண்டாவது அலையில் இருந்து மீண்ட தருணத்தில், கடுமையான மழையை எதிர்கொண்டோம். அப்போது, ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியதால், பொதுமக்கள், கடுமையான இன்னல்களுக்கு உள்ளானார்கள்.
நமது அரசு அமைந்ததும், கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்டதும், இயற்கைப் பேரிடரால் இனி சென்னை மக்கள் எந்தக் காலத்திலுமே துயரப்படாத வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு, பழுதான சாலைகளும், சீரழிந்த வடிநீர் கால்வாய்களுமாகச் சிதைந்து கிடந்த சென்னையை முழுமையாக மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பெரும் பணிதான் தற்போது நடைபெற்று வருகிறது.
நகரின் அனைத்துப் பகுதியிலும் இந்தப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை நான் நன்றாகவே அறிவேன். ஆனாலும், இந்தச் சிரமங்களை சிறிது காலம் சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சிறிது காலச் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டால், நெடுங்கால நன்மை காத்திருக்கிறது.
அதாவது, இனி சென்னையில் எப்போதுமே கனமழை காரணமாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்தப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மட்டுமில்லாம, தமிழ்நாடு முழுமைக்கும் இதேபோல மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில், வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையில மட்டும் 4560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நானே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறேன். மழைக்கு முன்னால் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன். விரைந்து செயல்படுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.